நாவலப்பிட்டி, கெட்டபுலா மத்திய பிரிவில் யுவதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி



க.கிஷாந்தன்-
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெட்டபுலா மத்திய பிரிவு தோட்டத்தை சேர்ந்த 25 வயதுடைய யுவதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, கிருலப்பனை பகுதியில் பணிப்புரிந்த இவர் கடந்த 25 ஆம் திகதி குறித்த யுவதி தனது வீட்டுக்கு வந்துள்ளார். இதனையடுத்து அவர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டார்.
அவரிடம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் (04.12.2020) பெறப்பட்டன. பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவருக்கு வைரஸ் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகள், சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் குறித்த யுவதியை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு, அனுப்பி வைத்துள்ளனர்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :