நிந்தவூர் காரைதீவு எல்லையில் கல்போட்டு பாதைத்தடை!



கொரோனா தடுப்பிற்கானது என்கிறார் நிந்தவூர் தவிசாளர் தாஹிர்.

காரைதீவு நிருபர் சகா-
காரைதீவு நிந்தவூர் ஆகிய இருகிராமங்களையும் இணைக்கும் இரண்டு உள்ளகப்பாதைகள் கல்போட்டு மறிக்கப்பட்டு தடைபோடப்பட்டுள்ளது.
எல்லையிலுள்ள இருபாலங்களிலும் கல்போட்டு பாதை போக்குவரத்திற்கு முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. நிந்தவூர் பிரதேசசபையினர் இத்தடையை ஏற்படுத்தியதாகக்கூறப்பட்டது.

இதேபோன்று அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை எல்லையில் வீதி மறிக்கப்பட்டுள்ளது.'

 இதுஅப்பிரதேசத்தில் பலவிமர்சனங்களைத் தோற்றுவித்துவருவதை சமுகவலைத்தளங்களில் காணக்கூடியதாயுள்ளது.
ஆனால் காரைதீவு நிந்தவூர் கிராமங்கள் அப்படியல்ல. பண்டுதொண்டு அந்நியோன்யமான இனஜக்கியத்துடன் தமிழ்முஸ்லிம் மக்கள் வாழ்ந்துவரும் கிராமங்களாகும். எனவே அப்படிப்பட்ட விமர்சனங்கள் இங்கு எழவில்லை.

இது பற்றி நிந்தவுர் பிரதேசசபைத் தவிசாளர் எ.எம்.தாஹிரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது..

வழமைக்கு மாறாக கல்முனைப்பிராந்தியத்தில் கொரோனாத் தொற்று அபரிமிதமாகப்பரவிக்கொண்டிருக்கிறது.

 எமது கிராமங்களிலாவது இதனைக்கட்டுப்படுத்த வேண்டுமெனக்கருதி இந்த வீதித்தடையைப்போட்டு மக்களூடாக கொரோன பரவுதலை தடுத்துவருகிறோம். இரு கிராம மக்களையும் காப்பாற்றும் நோக்கில்தான் இத்தடையை போட்டுள்ளோம்.

மேலும் பிரதான வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு தொற்றுநீக்கி விசிறும் செயற்பாட்டையும் மேற்கொண்டோம். கொரோனாவை விரட்டுவதற்கு பொதுமக்கள் சகல வழிகளிலும் உதவவேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :