திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் பெய்து வருகின்ற அடை மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு,வடிகாண்களிலும் நீர் நிரம்பி வழிகின்றன.

எப்.முபாரக் -

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் பெய்து வருகின்ற அடை மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு,வடிகாண்களிலும் நீர் நிரம்பி வழிகின்றன.

இம்மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா,மற்றும் மூதூர்,திருகோணமலை போன்ற பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருகின்றது.

சிறு வீதிகள் மற்றும் தாழ் நிலப்பகுதிகளில் மழை நீர் நிரம்பியுள்ளன.

கந்தளாய் பிரதேசத்தில் 22 பேரில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதோடு உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளார்கள்.

கந்தளாய் பிரதேச செயலகத்தினால் நிவாரத்திற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திருகோணமலை மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் கடல் அழைகளின் தாக்கம் அதிகரித்துள்ளதோடு கடல் கொந்தளிப்பாகவும் காணப்படுகின்றன.

மீனவர்கள் யாரும் கடலுக்கும் செல்ல வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :