COVID 19 மரணித்த உடல்களை அடக்குவது தொடர்பில் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளியிட்டுள்ள இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி (CCPSL)



COVID மரணித்த உடல்களை எரிப்பதா? அடக்குவதா? என்ற சர்ச்சையில் நிபுணத்துவ கருத்துகள் சம்பந்தமே இல்லாத பலரால் முன்வைக்கப்பட்டன.
இலங்கையில் தொற்றுநோய் பரவல், அதன் கட்டுப்படுத்தல் தொடர்பான சமூக மட்டத்தில் தீர்மானங்களை மேட்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கும் நிபுணத்துவம் மிக்கவர்களாக Consultant Community Physicians (Epidemiologists) திகழ்கின்றனர்.
இவர்களின் அமைப்பாக College of Community Physicians உள்ளது. இதன் தற்போதைய தலைவராக திகழ்ந்துவரும் Dr. Nihal Abeysinghe ஏற்கனவே COVID மரணித்த உடல்களை அடக்குவதால் எந்த பிரச்சினையும் இல்லை என்று Media க்களில் தெரிவித்து வந்த நிலையில் College of Community Physicians தனது நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக அவர்களது இணைய பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளனர்.
4 பக்கங்களை கொண்ட அந்த ஆய்வறிக்கையை இன்று வெளியிடுவதாக Dr. Nihal Abeysinghe (Consultant Community Physician) நேற்று (30-12-2020) இடம்பெற்ற ZOOM கலந்துரையாடலில் தெரிவித்திருந்தார்.
#அந்த_ஆய்வறிக்கையின்_முடிவுரை:
இறந்த உடல்களை அடக்கம் செய்வது நோயின் பரவலை அதிகரிக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
கிடைக்கக்கூடிய விஞ்ஞான சான்றுகள் மற்றும் தொற்றுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தகனம் செய்வதற்கான முடிவின் எதிரொலியான பின்விளைவுகளுடன் ஒப்பீடு செய்கையில்,
உலகளாவிய வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் மூலம், இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் அவன் / அவள் மற்றும் குடும்பத்தின் விருப்பத்தின் படி சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட கடுமையான வழிகாட்டுதல்களுக்குள் தகனம் செய்ய அல்லது அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று CCPSL முடிவு செய்கிறது.
Conclusion
There are no solid evidence indicating that burial of dead bodies would increase the spread of the disease. With the available scientific evidence and the impact of the decision on cremation on pandemic control activities at large, CCPSL concludes that adhering to global guidelines13, each citizen of Sri Lanka should be allowed to be cremated or buried as per his/her and the family’s desire within the strict guidelines recommended by the Ministry of Health.
இலங்கையில் நிகழும் எரித்தல் தொடர்பான சர்ச்சையில் இந்த அறிக்கை மிகப்பெரும் செல்வாக்கை செலுத்தும்.
முழுமையான அறிக்கையை தரவிறக்கம் செய்ய:
https://ccpsl.org/.../CCPSL-Position-Paper-on-the-debate...
இதற்கிடையில் COVID மரணித்த உடல்களை அடக்கம் செய்வது தொடர்பான புதிதாக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஏற்கனவே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :