COVID-19 ஒழிப்பு தொடர்பாக சாய்ந்தமருது சிவில் சமூகத்தின் ஒத்துழைப்பு

சா
ய்ந்தமருது சிவில் சமூகத்தினரால் COVID-19 ஒழிப்பு தொடர்பாக சுகாதார தூறையினருக்கு தற்பொழுது வழங்கி வருகின்ற ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்துதல் தொடர்பாக ஆராய்ந்து முன்னுரிமைப்படுத்தல் அடிப்படையில் செயற்பாடுகளை முன்னெடுத்துசெல்வதற்கான செயற்திட்டங்களை ஆராய்கின்ற கூட்டம் 19/12/2020 சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் யூத் அலியன்ஸ் ஶ்ரீ-லங்கா அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் இஷட்.எம் ஸாஜீத் தலமையில் இடம் பெற்றது.

இதில் கல்முனை பிராந்திய தொற்று நோய் பிரிவு பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி நாக்ஷர் ஆரீப், யூத் அலியன்ஸ் ஶ்ரீ-லங்கா அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகரும் முன்னால் விரிவுரையாளர் சதாத், யூத் அலியன்ஸ் ஶ்ரீ-லங்கா அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகரும் விரிவுரையாளருமான கலாநிதி பொறியிளார் அஸ்லம் ஸஜா,சாய்ந்தமருது பொதுச் சுகாதார அதிகாரிகள், சாய்ந்தமருது பிரதேச கிராம நிலதாரிகள், சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் நஜூமுதீன், யூத் அலியன்ஸ் ஶ்ரீ-லங்கா அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகர் சர்ஜூன் இஸ்மயில்,வைத்தியர் சனூஸ் காரியப்பர்,சாய்ந்தமருது கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.ஐம் அசீம் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் யூத் அலியன்ஸ் ஶ்ரீ-லங்கா அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள், ஆலோசனை சபை உறுப்பினர்களான உதுமாலெப்பை, லத்தீப் மற்றும் ஊடகவியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் வைத்தியர் சனூஸ் காரியப்பர் தலமையில் 7 பேர் கொண்ட Covid-19 வைத்திய ஆலோசனை குழு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :