மக்களாட்சியில் மனித உரிமைகள்! NCHRO கருத்தரங்கம்!



சென்னை- செய்யது இப்ராஹிம் கனி-
டிசம்பர் 10 - சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு, தேசிய மனித உரிமைகள் அமைப்புகளின் கூட்டமைப்பு(NCHRO) சார்பாக "மக்களாட்சியில் மனித உரிமைகள்" என்ற தலைப்பில் இன்று (டிசம்பர் 13 ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.00 மணி அளவில் சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் வழக்கறிஞர் பவானி. பா. மோகன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஷாஜகான் வரவேற்றார்.
NCHRO தேசிய தலைவர் பேராசிரியர்.அ.மார்க்ஸ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா,
சமுக செயற்பாட்டாளர் பேராசிரியர் சுந்தரவள்ளி , NCHRO தேசிய செயற்குழு உறுப்பினர் திரு.கோ.சுகுமாறன், திரைப்பட இயக்குனரும் , கவிஞருமாகிய லீனா மணிமேகலை ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினர்.
இறுதியாக மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் நவ்ஃபல் நன்றி கூறினார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :