கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இதற்கு முன்னர் குறிப்பிடப்பட்ட தினங்களில் இடம்பெறுமா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் இன்று (01) அல்லது நாளை (02) அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமைக்கு மத்தியில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவர்களில் 50 சதவீதமான மாணவர்களுக்கு கல்வி கற்க முடியாத நிலை காரணப்படுதவாக அவர் தெரிவித்தார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையில் நடாத்த இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
குறித்த தினங்களில் பரீட்சை இடம்பெறுமா இல்லையா என்பது தொடர்பில் விரைவில் அறிவிப்பு ஒன்றை மேற்கொள்வதாக அமைச்சர் ஜி.எல் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment