கல்முனை RDHS , முஸ்லிம்களுக்கு எதிரானதா ?

ஏ.எச்.எம்.பூமுதீன்-


ர்வக்கோளாறுதான்....
1 - கல்முனையில் தற்போதுள்ள LockDown சட்டரீதியானதா / அனுமதி வழங்கியது யார்?
2 - பரிந்துரைக்கப்பட்ட பகுதிகளில் பல Lockdown செய்யப்படாதது 
ஏன் ?
3 - உங்கள் பதவியை பயன்படுத்தி -
பழி தீர்க்கிறீர்களா ?
4 - PCR Test செய்யப்பட்ட வைத்தியசாலை ஊழியர் ஒருவர் 03 நாள் கடமைக்கு சென்று வந்த பின்னர் வெளியான முடிவு
Positive !
குறித்த வைத்தியசாலை - கல்முனை RDHS பிரிவுக்குட்பட்டது.

இங்கு குறிப்பிடப்படும் ஊழியர் பெண்.
அவர் கடமையாற்றிய வைத்தியசாலை வோட் இலக்கம் 3.
இந்தப் பெண் - வோட் 3 Labour Room இற்கும் சென்று வந்துள்ளார். அங்கு கடமையாற்றும் மற்றொரு பெண்ணுடனேயே கடமைக்கும் சென்று வந்துள்ளார்.

ஆனால் , வோட் 3 நோயாளிகள் , வைத்தியர்கள் , தாதிகள் , Labour Room ஊழியர்கள் மற்றும் தன்னுடன் கடமைக்கு வரும் பெண் என்று எவருக்குமே Antigen Test அல்லது தனிமைப்படுத்தல் என்று எதுவுமே மேற்கொள்ளவில்லை.

5 - சாஹிராக் கல்லூரி வீதிச் சந்தியில் இருக்கும் தாஜ் ஹோட்டல் ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதுவரை - அந்த ஹோட்டலுக்கு சென்று வந்தவர்களை ஏன் அடையாளம் காணவில்லை ?
அல்லது " தாஜ் ஹோட்டலுக்கு சென்று வந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் - தத்தமது PHI களுக்கு அறிவியுங்கள் " என்று இதுவரை , சம்பந்தப்பட்ட சுகாதார துறையினர் பகிரங்க அறிவித்தல் விடுக்காதது ஏன் ?

6 - RDHS , முஸ்லிம்களுக்கு எதிரானதா ?
இதுபோன்று - இன்னும் பல சந்தேகங்களுக்கு உங்களிடமிருந்து பதில் வரும் - என்ற ஆர்வக்கோளாறு மக்கள் மத்தியில் உள்ளது.
உங்கள் பாஷையில் கூறப்போனால் -
"மக்கள் தூங்கவில்லை"

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :