UKயில் கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பைசர்-பயோன்டெக் ( Pfizer/BioNTech ) நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்தத் தடுப்பூசியை அவசர தேவைக்காக பயன்படுத்த UK அரசாங்கம் அனுமதி வழங்கியது.
இதனையடுத்து 1ம் கட்டமாக கொரோனா தடுப்பில் களப் பணியாற்றுபவர்கள், முதியவர்கள் மற்றும் நோய் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தும் பணி தொடங்கியது. இந்நிலையில் 1ம் கட்டமாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் சுகாதாரப் பிரிவில் வேலை செய்பவர்கள் 2 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்களுக்கு உடனே மாற்று மருந்து கொடுக்கப்பட்டது. இதனையடுத்து UK மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ( Medicines and Healthcare products Regulatory Agency ) புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி ஒருசில மருந்துகள், உணவுகள் மற்றும் தடுப்பூசிகளால் ஒவ்வாமை அல்லது பக்கவிளைவுகள் ஏற்படும் நபர்கள் இந்த தடுப்பூசியை போட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடுவதால் சிலருக்கு இதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படுவது இயல்புதான் என்றும், இதனால் பெரியளவில் பாதிப்புகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசியால் ஒவ்வாமை ஏற்பட்ட 2 சுகாதாரப் பிரிவில் வேலை செய்தவர்களுக்கு ஏற்கனவே ஒவ்வாமை பிரச்சினை இருந்துள்ளது.
0 comments :
Post a Comment