UKயில் வளர்சிதை மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவி வருவதால் விமான சேவையை நிறுத்தும் ஐரோப்பிய நாடுகள்!

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்

கொரோனா வைரஸின் பாதிப்பை தடுக்கும்வகையில் UKயில் கடந்த வாரம் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

கொரோனா தடுப்பூசியை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1ம் வாரத்திலேயே ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பைசரின் தடுப்பூசி போடப்பட்டது. இதனால், UKயில் கொரோனா விரைவில் கட்டுப்பாட்டிற்குள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடந்த சில நாட்களாக UKயில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் புதிய உச்சத்தை தொட்டது.

கொரோனா வைரஸ் இவ்வளவு வேகமாக பரவ காரணம் என்ன? என்பது குறித்து UK விஞ்ஞானிகளும் , ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினரும் ஆராய்ச்சி செய்தனர்.

அதில் தற்போதைய கொரோனா வைரஸ் முந்தைய கொரோனா வைரசை விட வித்தியாசமானதாக இருந்தது. அதாவது கொரோனா வைரஸ் சூழ்நிலைக்கு ஏற்றால்போல வளர்சிதை ( metabolism ) மாற்றம் அடைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் முன்னைய கொரோனா வைரஸின் பாதிப்பு சக்தியை கொண்டிருந்த போதும் அது பரவும் வேகம் மிகவும் அதிகளவில் இருந்தது. அதாவது, முன்னைய கொரோனா வைரசை காட்டிலும் இந்த புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை உடையதாகவுள்ளது.

இதன் காரணமாகவே UKயில் அதிகளவில் கொரோனா வைரஸால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்ற தகவலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதை உறுதியானதையடுத்து UKயில் பல்வேறு மாகாணங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை தடை செய்வதாக UK பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்டறு அறிவித்தார். மேலும், லண்டன் உள்ளிட்ட பல பகுதிகளிலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை அமுல்படுத்தினார்.

இதற்கிடையில், பல்வேறு ஐரோப்பிய நாடுகள் UKயுடன் கடந்த சில வாரங்களுக்கு முன்னரே விமான சேவையை மீண்டும் தொடங்கியிருந்தனர்.

இதனால், பிற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் UKக்கு செல்லவும், UKயை சேர்ந்தவர்கள் பிற நாடுகளுக்கு செல்லவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் வளர்சிதை மாற்றம் அடைந்து புதியவகை கொரோனா வைரசாக மாற்றமடைந்து வேகமாக பரவி வருவதால் பல ஐரோப்பிய நாடுகள் UK உடனான விமான சேவையை நிறுத்தியுள்ளன.

ஆஸ்திரியா, இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் UK உடனான விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன. இந்த தடை இன்று முதல் உடனடியாக அமுலுக்கு வருவதாக அந்நாடுகள் அறிவித்துள்ளன.

மற்ற நாடுகளை போலவே ஜேர்மனியும், பிரான்ஸூம் UK உடனான விமான சேவையை நிறுத்த திட்டமிட்டு வருகின்றன. இந்த விமான சேவை தடை முடிவை ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸூக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி உலக மக்களிடையே மகிழ்ச்சியான செய்தியாக வந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் அதன் தகவமைப்பை மாற்றி வளர்சிதை மாற்றமடைந்துள்ளது என்ற தகவல் சற்று அதிர்ச்சியளிக்கும் வகையிலே உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :