தொலைந்த காதலும் Whatsapp statusகளும்



முன்னால் காதலி என்ற ஒரே நினைவுக்காக, யாரோ ஒருவரின் மனைவிக்காக உருகி உருகி தன் நிலை மறந்து statusகள் பதிவிடும் ஆண் சகோதரர்களின் நிலை கண்டு கவலைப்படுவதா? இல்லை இவர்கள் ஏன் இவ்வளவு மடைமைத்தனமாக நடந்து கொள்கின்றார்கள் என்று நினைத்து சிரிப்பதா என்பது எனக்குள் ஓர் விடை தெரியாக் கேள்வியாகவே வலம் வருகின்றது.
அவளோ தற்போது யாரோ ஒருவரின் மனைவி, நான் ஏன் இன்னும் அவளையும் அவளது நினைவுகளையும் மனதில் போட்டு அலசிக் கொண்டிருக்கின்றேன் என, எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா?

சற்று யோசித்துப் பாருங்கள் சகோதரர்களே!
நீங்கள் statusகளாகவும் மற்றும் storyகளாகவும் பதிவிடும் இவ்வகையான பதிவுகள் உங்களுக்கு ஒருபோதும் மன ஆறுதலாகவோ, அல்லது இழந்ததைப் பெறுவதற்கான வழியாகவோ அமைய மாட்டாது.
மாறாக விட்டுச் சென்றவள் திரும்ப வரப்போவதும் இல்லை. ஏனெனில் அவளோ, அவளுக்கான வாழ்க்கைப் பயணத்தை விரும்பியோ விரும்பாமலோ இன்னோர் ஆண்மகனுடன் இறைவன் போட்ட முடிச்சின் படி ஆரம்பித்து விட்டாள்.
அவளுக்காக, அவளது நினைவுகளை தினம் தினம் மீட்டிப் பார்த்துக் கொண்டு இருப்பது மட்டுமல்லாமல், உங்கள் எண்ணங்களையும் கவலைகளையும் இழப்பின் வெளிப்பாட்டையும் படங்களாகவோ அல்லது சினிமாப் பாடல்களுடன் கூடிய வீடியோக் காட்சிகளாகவோ பதிவு செய்து உங்கள் நிலைப்பாட்டினை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்திக் கொண்டு இருக்கின்றீர்களே தவிர வேறில்லை.
ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அவ்வாறான பதிவுகள் அதனைப் பார்ப்பவர்கள் மத்தியில் உங்கள் மடமைத் தனத்தை ஊகித்துக் கொள்ளத் தக்கதாகவும் மாறாக statusகளில் பதிவிடுவதன் மூலம் இழந்ததைத் திரும்பப் பெற முடியாது என்ற செயற்பாடு ரீதியான எண்ணம் கூட இல்லாமல் இருக்கிறார்களே என்ற பரிதாப உணர்வினையுமே ஏற்படுத்துகின்றது என்றே கூறலாம்.
அத்தோடு தற்போது உங்களுடன் நேசத்திற்குரியவர்களாக பழகி மற்றும் பயணித்துக் கொண்டும் இருப்போர் மனதிலும் உங்களைப் பற்றிய ஒரு கசப்புணர்வையும் கவலையையும் ஏற்படுத்தக்கூடும் என்றே நினைக்கின்றேன்.
ஆகவே இவ்வாறான status, story களால் நீங்கள் உங்களை சுற்றியுள்ள, உங்களை நேசிக்கக் கூடியவர்களின் அன்பையும் இழந்து விடுவீர்களே தவிர, உங்களுக்கு உங்களுடைய முன்னால் காதலி, ஒன்றும் கிடைக்கப் போவதும் இல்லை. சிலவேளை உங்களுடன் நேசமாக இருப்பவர்கள் கூட உங்களை விட்டுத் தூரமாகவே நேரிடும்.
நான் ஏன் இன்னும் முடிந்ததைப்பற்றி சிந்தனை செய்கின்றேன்? என்னையும் என்னைச் சுற்றியுள்ளவர்களையும் நான் கஷ்டப்படுத்துகின்றேனா? இவற்றை மீட்டுவதால் எனக்கென்ன பயன்? எவ்வாறாயினும் அவள் தான் கிடைப்பாளா? இல்லையே என சற்று சிந்தித்துப் பார்த்தால் புரியும் என நினைக்கிறேன்.

ஆகவே அவளது நினைவலைகளை மீட்டும் விதமாக statusகளைப் பதிவிடுவதைத் தவிர்த்து, அவளோ அவள் வாழ்க்கையைத் தொடங்கி விட்டாள்...
நான் என் வாழ்க்கையைப் புதிதாக ஒரு திருப்பத்தை நோக்கி பல புதிய நினைவுகளோடு வாழத் தயாராக வேண்டும் என்று புரிந்து கொண்டால், உங்களுடைய வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் நிகழலாம். அது உங்களை மாத்திரமின்றி உங்களை சுற்றியுள்ள குடும்பம், நண்பர்கள் என அனைவரையும் சந்தோசப் படுத்தக் கூடும்.

....Past is past brothers.
ஆகவே சகோதரர்களே!
உங்கள் கவலைகளையும் இழப்புகளையும் statusகளாக பதிவிடுவதை விட்டு, இறைவனிடம் முறையிடுங்கள். நீங்கள் இழந்ததை விட சிறப்பான வாழ்க்கைத் துணையை இறைவன் உங்களுக்கு அமைத்துத் தருவான். இன்ஷா அல்லாஹ்.
(இவ்வாறான status களை பெண் சகோதரிகளை விட, ஆண் சகோதரர்களே அதிகம் பதிவிடுவதை காண்கின்றேன். ஆதலால் தான் நான் இங்கு ஆண்களைக் குறிப்பிட்டுக் கூறினேனே தவிர இவ்வாறான நிலைமையில் பெண் சகோதரிகளும் இல்லாமல் இல்லை என்பது பிற்குறிப்பு)

"மாற்றம் இல்லாமல் வாழ்க்கை இல்லை
மழை மட்டும் தராது வானவில்லை"
என்ற வரிகளுடன்...

அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமைய என் பிரார்த்தனைகள்.....!!!

ஆக்கம்: Maaysha Nazmil
Student : University College of Rathmalana - UOVT
2020.12.09

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :