லீடர் அஷ்ரப் கனிஷ்ட பாடசாலைக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம்ரூபா பெறுமதியான தளபாடங்கள் வழங்கி வைப்பு



பைஷல் இஸ்மாயில் -
க்கரைப்பற்று லீடர் அஷ்ரப் கனிஷ்ட பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 50 கதிரைகளை தேசிய அரச சார்பற்ற நிர்வனத்தினால் இன்று (16) வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் ஐ.நைஸர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அக்கரைப்பற்று வலய கல்வி பிரதிப் பணிப்பாளர் ஏ.ஜி.பஸ்மீல் மற்றும் தேசிய அரச சார்பற்ற நிர்வனத்தின் தவிசாளரும், குறித்த பாடசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளருமாகிய எஸ்.எம்.லாபீர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

லீடர் அஷ்ரப் கனிஷ்ட வித்தியாலயத்தை கொண்டு வருவதற்காக பல போராட்டங்களைச் செய்யவேண்டி இருந்தது. அந்தப் போராட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற இந்தப் பாடசாலை பல சாதனைகளை அடைந்து செல்கிறது. இது எம் பிரதேசத்திலுள்ள பெற்றோர்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று தேசிய அரச சார்பற்ற நிர்வனத்தின் தவிசாளரும், குறித்த பாடசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளருமாகிய எஸ்.எம்.லாபீர்தெரிவித்தார்.
பாடசாலையை முன்னெற்றுவதும், பின்னடையச் செய்வதும் அந்தப் பிரதேசத்திலுள்ள பெற்றோர்களின் கைகளில்தான் தங்கியிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இப்பாடசாலை ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரை தரம் 1, 2, 3, 4 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் கற்றல் உபகரணங்களை குறித்த நிர்வனத்தின் தவிசாளரினால் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :