ஒரே நாளில் விபத்துக்களால் 12 பேர் பலி



J.f.காமிலா பேகம்-
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதிக்குள் குறித்த விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார்
மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் மேலும் 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதிக்குள் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன்படி கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் ஆயிரத்து 824 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த காலப்பகுதிக்குள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 65 நபர்கள்
உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :