கிழக்கில் 14 வது கொரோனா மரணம் சாய்ந்தமருதில்!



கிழக்கில் :2285 கல்முனை:1163 மட்டக்களப்பு:573 திருமலை:415 அம்பாறை:111
வி.ரி.சகாதேவராஜா-
கிழக்கு மாகாணத்தில் 14 வது மரணம் சம்பவித்துள்ளது. கல்முனைப்பிராயந்திலுள்ள சாய்ந்தமருதுப்பிரிவில் இம்மரணம் ஏற்பட்டுள்ளது. கல்முனைப்பிராந்தியத்தில் 7 வது மரணம் இதுவாகும்.

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றுக்களின் எண்ணிக்கை 2200 ஜ தாண்டியுள்ளது.அங்கு நேற்றையதினம் (27) புதன்கிழமை 2285 ஆகியது. அதேவேளை கல்முனைப்பிராந்தியம் 1100 ஜத் தாண்டி 1163 ஆகியது.
கல்முனைப்பிராந்தியத்துள் வரும் அக்கரைப்பற்று பிரதானசந்தை மூலமாக ஏற்பட்ட உபகொத்தணிப்பரவலும்; 1100 த்தாண்டியது. அந்த உப கொத்தணியில் இதுவரை 1125 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதமிருந்து பேலியகொட மூலமாக இதுவரை கல்முனை பிராந்தியத்தில் 1163 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 573 பேரும் திருமலை மாவட்டத்தில் 415 பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 111பேருமாக 2262 பேர் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.

மேலும் வெளிநாடு மினுவாங்கொட கந்தக்காடுகொத்தணி வெலிசற கடற்படைமுகாம் போன்ற மூலங்களிலிருந்து மீதி 23 தொற்றுக்கள் இனங்காணப்பட்டுள்ளன.

14 மரணங்கள்!

இதுவரை கிழக்கில் சம்மாந்துறை ஒலுவில் சாய்ந்தமருது அட்டாளைச்சேனை வவுணதீவு காத்தான்குடி நாவிதன்வெளி ஆலையடிவேம்பு உகனை காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பிலுமாக மொத்தம் 14 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.
கல்முனைப்பிராந்தியத்தில் 07 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 பேரும் அம்பாறைப்பிராந்தியத்தில் இருவருமாக இந்த 14 மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.

இத்தரவுகளை கிழக்குமாகாண சுகாதாரத்திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :