பிப்ரவரி 17 – பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும்! மாநில செயற்குழு தீர்மானம்!!



பி.எஸ்.ஐ.கனி-
திண்டுக்கல் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் ஜனவரி 17,18 ஆகிய இரு நாட்கள் திண்டுக்கல்லில் நடைபெற்றது. மாநில தலைவர் முகம்மது சேக் அன்சாரி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய தலைவர் ஓ.எம்.ஏ. சலாம் , தேசிய செயற்குழு உறுப்பினர்கள் முஹம்மது அலி ஜின்னா, வழக்கறிஞர் முஹம்மத் யூசுப் , ஏ.எஸ். இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

1.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17 ம் தேதியை நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக கொண்டாடி வருகின்றது. அன்றைய தினத்தில் மாநிலம் முழுவதும் கொடியேற்று நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை கோலாகலமாக நடத்த வேண்டும்.

2.மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஜனவரி-26 குடியரசு தினத்தன்று ஒரு இலட்சம் டிராக்டர்களுடன் பேரணி நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், தேசிய புலனாய்வு முகமையானது போராட்ட விவசாயிகள் மீதும், ஆதரவு தெரிவிப்பவர்கள் மீதும் வழக்கு பதிந்து வருகின்றது. இதனை வன்மையாக கண்டிப்பதோடு, மத்திய பாஜக அரசு விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்ப பெறுவதுடன், வேளாண் சட்டங்களையும் திரும்பபெற வேண்டும்.

3.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜக வில் இணையும் ரவுடிகளால் தொடர் முயற்சி நடைபெறுகிறது. எனவே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை காக்க தமிழக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4.தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள் ஆர்.எஸ்.எஸ் சிந்தனைவாதி கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்ட தினமான ஜனவரி 30 அன்று , காந்தியை கொன்றவர்கள் தேசத்தை கொல்கிறார்கள் என்ற முழக்கத்தை முன்வைத்து, பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட நேரத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்துவது,

5.காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தை தனது ரிபப்ளிக் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி ரேட்டிங் உயர்வதற்காக தவறான தகவலை வெளியிட்ட அர்னாப் கோஸ்வாமி மற்றும் பாஜக அமைச்சர் மற்றும் அவருக்கு உதவிய அனைவர் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :