கல்முனை கடற்கரைபள்ளி 199 ஆவது கொடியேற்றம் .



நூருள் ஹுதா உமர்-
ல்முனை நாகூர் ஆண்டகை தர்கா சரிபின் 199 வது கொடியேற்ற விழா வரலாறு காணாதவகையில் 30 பேர் அளவில் மட்டுமே அனுமதிக்கப்பட்டு மிக எளிமையான முறையில் இன்று (14) மாலை அஸர் தொழுகையை தொடர்ந்து மௌலீத் ஓதலுடன் ஏழு அடுக்கு மொனோராவில் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் டாக்டர் கே.எம்.ஏ. அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். நிஸார் உட்பட நிர்வாகிகள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.
பிரதம மொனோரா உட்பட 23 மொனோராக்களில் 23 கொடிகள் ஏற்றப்பட்டு மௌலீத் மஜ்லிஸ் நடைபெற்றது. இவ்விழா இன்னும் 12 நாட்களுக்கு தொடர்ந்து இறுதிநாள் நிகழ்வன்று கந்தூரியுடன் நிறைவு பெற உள்ளது.
இராணுவம், பொலிஸாரின் அதி உச்ச பாதுகாப்புடனும், சுகாதார வைத்திய அதிகாரி காரியலய பொதுச் சுகாதார பரிசோதகர்களின் உயரிய சுகாதார வழிகாட்டலுடனும் இந்நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :