கொவிட் 19 சட்டத்தை மீறி வகுப்பு நடத்தியவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்



நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-

கொவிட் 19 சுகாதார விதிமுறையை மீறி வகுப்பு நடத்திய ஆசிரியைக்கு ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது .

அட்டன் நகரில் சுகாதார விதிமுறையை மீறி வகுப்பு நடத்துவதாக அட்டன் டிக்கோயா நகரசபை பொது சுகாதார பரிசோதகருக்கு பொது மக்களினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து அட்டன் டிக்கோயா பொது சுகாதார பரிசோதகரினால்
வகுப்பு நடத்திய குறித்த ஆசிரியைக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
சம்பந்தப்பட்ட ஆசிரியை 08/01 /2021 அட்டன் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளார் .
மேலும், கொவிட் 19 சுகாதார விதிமுறை சட்டத்தை மீறிய வகையில் இடம்பெற்ற வகுப்பிற்கு வருகைத்தந்திருந்த ஐம்பது மாணவர்கள் வரை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் ஆர்.ஆர் மெதவெல்ல தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :