20 நாள் குழந்தையின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் நீதிமன்றில் (22) வெள்ளி விவாதம் - பைஸர் முஸ்தபா தானே முன்வந்து ஆஜராகிறார்



மினுவாங்கொடை நிருபர்-
ருபது நாள் குழந்தையின் ஜனாஸாவை, பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர், சிரேஷ்ட ஐனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது சமூகத்திற்காக நீதிமன்றத்தில் தானாக முன் வந்து மனுத்தாக்கல் செய்து, தானே நீதிமன்றில் இவர் ஆஜராகவுள்ளார்.
மரணித்து இருபது நாட்களேயான குழந்தையின் ஐனாஸாவை (தகனம்) எரித்ததற்கு எதிரான இந்த உச்ச நீதிமன்ற வழக்கு, (22) வெள்ளிக்கிழமை விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையிலான சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள் அடங்கிய குழுவினர், குறித்த வழக்கில் வாதிடவுள்ளனர். மிகவும் ஆணித்தரமாகவும் விஞ்ஞான ரீதியாகவும் அத்துடன், மிகத் தெளிவாகவும் விரிவாகவும் நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில், இந்த வழக்கு விசாரணைகளின்போது விவாதிக்கப்படவுள்ளது.
இருபது நாள் குழந்தையின் ஜனாஸா தகனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையின் பல பாகங்களிலும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, லண்டன், ஜேர்மன், இந்தியா போன்ற நாடுகளிலும் கண்டனப் பேரணி்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :