பாலமுனை வைத்தியசாலை விவகாரம் : 23ம் திகதி மீண்டும் நீதிமன்றுக்கு வருகிறது.

நூருல் ஹுதா உமர்-

பாலமுனை கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையின் நோயாளிகளது கழிவுகளால் நிலக்கீழ் நீர் மாசடைந்து அப்பிரதேசத்தில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனத் தெரிவித்து இதனைத் தடுக்க மன்றின் கட்டளையைப் பெறுவதற்கு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் கடந்த மாதம் வழக்குத்தாக்கல் ஒன்று செய்யப்பட்டிருந்தது.

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை அழைக்கப்பட்ட வழக்கில் இருசாரரையும் விசாரிக்கப்பட்டது. சுகாதாரத்துறை தரப்பின் சார்பில் ஆஜரான கிழக்கு மாகாண சட்ட அதிகாரி தலைமையிலான சட்டத்தரணிகள் தமது பக்க வாதத்தை நீதிமன்றுக்கு எழுத்து மூலம் சமர்பித்திருந்த நிலையில் வழக்காளிகளுக்கு தமது பக்க வாதத்தை நீதிமன்றுக்கு அறிவிக்க பெப்ரவரி 09ம் திகதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 23ம் திகதி கட்டளை பிறப்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பாலமுனை ஊர்மக்கள் சார்பில் இவ்வழக்கை சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், ஏ.ஏல்.அலியார், எஸ். ஆபிதீன். ஏ.எல்.ஹஸ்மீர், பி.எம்.ஹுஸைர் அடங்கிய ஐந்து பேர் வழக்குத் தாக்கல் செய்திருந்ததுடன் பாலமுனை ஊர்மக்கள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ், குரல்கள் இயக்கத்தின் (Voice Movement) சட்டத்தரணிகளான எம்.எம். றத்தீப் அகமட் மற்றும் யு.எல்.வஸீம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :