மருதமுனை வைத்தியசாலை 24 மணி நேர அவசர சிகிச்சைப் பிரிவாக இயங்கும்-டாக்டர் ஏ.எல்.எம்.மிஹ்ளார்.

ருதமுனை பிரதேச வைத்தியசாலை 24 மணி நேர அவசர சிகிச்சைப் பிரிவாக (2021/01/10) முதல் இயங்குவதாக வைத்தியசாலையின் பிரதேச வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.மிஹ்ளார் தெரிவித்துள்ளார்.

மருதமுனை வைத்தியசாலைக்கான பிரதேச வைத்திய அதிகாரியாகப் பொறுப்பேற்றதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய வைத்திய அதிகாரி,

டிசம்பர் மாதம் 9ஆம் திகதி மருதமுனை வைத்தியசாலை கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தூர இடங்களுக்குச் செல்கின்ற எமது தாய்மார்களும் குழந்தைகளும் இந்நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வைத்தியசாலையின் தேவை முடியும் வரை மருதமுனை காரியப்பர் வீதியிலுள்ள தாய்-சேய் நலனோம்பு நிலையத்தில் வைத்தியசாலை இயங்குவதற்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாம் வழமையாகச் வழங்கி வந்த வெளிநோயாளர் சேவை, பற்சிகிச்சை நிலைய சேவை, ஆரோக்கிய வாழ்வு சிகிச்சை, உள நல வைத்தியசேவை மற்றும் கிளினிக் சேவை என்பனவும் தொடராக இடம் பெறவுள்ளன.

குறித்த இடத்தில் இயங்கி வந்த தாய்-சேய் நலனோம்பு சேவையும் மக்களைச் சென்றடைவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விடுதியில் நோயாளிகளைத் தரித்து வைத்து சேவை செய்யக் கூடிய வசதி வாய்ப்புக்கள் தற்போது இல்லாத போதும் அதன் தேவையினை ஓரளவுக்கு நிவர்த்தி செய்யக் கூடியதான மாற்றீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தி வருவதாகவும்,

நாட்டின் தற்போதைய கொரோனா பரவல் அச்ச சூழ்நிலையினைக் கருத்திற் கொண்டு விடுதி வசதி இல்லாது போனாலும் வருகின்ற நோயாளிகளை திருப்தியோடு அனுப்பி வைக்கும் நோக்கில் 24 மணிநேர சேவையினை வைத்தியசாலையில் வைத்தே வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

மிகக் குறைந்தளவான ஆளணியினர் தான் கைவசம் இருந்த போதிலும் சேவை நேரத்திற்கு அதிகமாக வைத்தியசாலையில் தரித்திருக்கக் கூடிய ஒப்புதலை அனைத்து நிருவாகத் தரப்பினரும் தந்திருப்பது சந்தோசத்தை அளிப்பதாகவும்,

நோயாளிகளுக்கு சிறப்பான சேவையினைத் தொடர்ந்தும் பெறக் கூடிய வாய்ப்பினை வழங்கியுள்ளதுடன் வைத்தியசாலை அபவிருத்திச் சபையானது இவ் வைத்தியசாலைக்குச் கிடைத்திருப்பது ஒரு வரப்பிசாதமாகும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :