கொரோனா தொற்றுக்குள்ளானமேலும் 353 பேர் அடையாளம் கா ணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 57 ஆயிரத்து 216ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, தொற்றுக்குள்ளான மேலும், 7 ஆயிரத்து 677 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அத்துடன், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 793 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ஹிக்கடுவை சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு இன்று உறுதி செய்தது,
முன்னதாக, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட Rapid Antigen பரிசோதனையின் மூலம், தொற்று உறுதி செய்யப்பட்டடிருந்தது.
இதனை அடுத்து, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் மூலம் மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில், நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இறுதியாக கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment