திருகோணமலை மாவட்டத்தில் 60,060 ஏக்கர் காணிகள் கைவிடப்பட்டுள்ளதாக தே.வி.ம முண்ணனியின் தலைவர் தெரிவிப்பு.

எப்.முபாரக்-

திருகோணமலை மாவட்டத்தில் 60,060 ஏக்கர் காணிகள் கைவிடப்பட்டுள்ளதாக தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் தெரிவித்தார்.

விவசாய நிலங்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு செவ்வாய் கிழமை(26) மாலை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்:

சுமார் 60,060 ஏக்கர் காணிகள் தகுதியான நீர்ப்பாசனம், நிலம் சீர் அற்ற நிலை, காட்டு மிருகங்கள் தடை செய்ய தேவையான மின் வேலிகள் பாதுகாப்பு இன்றி கைவிடப்பட்டுள்ளது.

இதில் அதிகமான 60% காணிகள் தகுதியான நீர்ப்பாசனம் இல்லாததே காரணம் இந்த காணிகள் பின்வரும் பிரதேச செயலக பிரிவில் காணப்படுகிறது.

குச்சவெளி பிரதேசத்தில் 14,714 ஏக்கரும்,கிண்ணியா பிரதேசத்தில் 15,492 ஏக்கரும்,தம்பலாகாமம் பிரதேசத்தில் 4,303 ஏக்கரும்,கந்தளாய் பிரதேசத்தில் 7,771 ஏக்கரும்,மொறவெவ பிரதேசத்தில் 6,746 ஏக்கரும்,கோமரங்கடவெல பிரதேசத்தில் 3,796 ஏக்கரும்,சேருவில பிரதேசத்தில் 3,546 ஏக்கரும்,மற்றும் திருகோணமலை பட்டினமும்,சூழலும் பிரதேசத்தில் 3,694 ஏக்கரும் காணப்படுகின்றது.

இந்த நெல் செய்கை காணிகளை சரியான முறையில் சீர் செய்வதுடன் அதற்கு தேவையான குளங்களை புணர் அமைப்பு மற்றும் நில பண்படுத்தும் திட்டத்தை மேற்கொண்டால் திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 10'000 மேற்ப்பட்ட விவசாய குடும்பங்கள் நன்மை அடைவதோடு தேசிய வருமானத்தையும் அதிகரிக்கலாம்

இப்படிப்பட்ட பல பாரிய அளவிலான குறைபாடுகளை கொண்ட திருகோணமலை மாவட்டத்தில் ஒரு பாரிய அரசியல் சக்தி உருவாக வேண்டும்.
என்ற நிலையை அறிந்தே நாங்கள் இம் மாவட்டத்தில் தனித்துவம் காக்க உருவாக்கியதே எமது கட்சி "தேசிய விடுதலை மக்கள் முன்னணி"ஆகும்.

ஆகவே எதிர்காலத்தில் சாதி சமயம் இனம் வேற்றுமை இன்றி அனைவரும் ஒன்றிணைந்து சக்தி பெற்று எமது மாவட்ட மக்கள் குறைபாடுகளை தீர்ப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :