கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் இவ்வருடம் தரம் ஆறுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (25) திங்கட்கிழமை நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் ஏ.எல்.அபுல் ஹஸன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜே.எப்.தாஜுன் நிஸா, ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஸாப் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, புதிதாக இணைந்த மாணவிகளுக்கு தரம் 7 இல் கல்வி கற்கும் மாணவிகள் மலர் வழங்கி வரவேற்றனர். அத்துடன், மாணவிகளின் மேடை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
0 comments :
Post a Comment