73 வது சுதந்திர தின நிகழ்வில் "தேசியகீதம்" தமிழிலும் இசைக்கப்பட வேண்டும்.-ஐக்கிய சமாதான கூட்டமைப்பு



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
73 வது சுதந்திர தின நிகழ்வில் "தேசியகீதம்" தமிழிலும் இசைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரச்சாரச் செயலாளர் ஐ.எம்.ஹாரிப் கோறிக்கை விடுத்துள்ளார்.
73 வது சுதந்திர தின நிகழ்வு எதிர்வரும் 04ம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரச்சாரச் செயலாளர் ஐ.எம்.ஹாரிப் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது.
முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் நல்லாட்சி காலத்தில் எமது நாட்டின் சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழிலும் "தேசியகீதம்" இசைக்கப்பட்டது.
ஆனால் சென்ற வருடம் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் தமிழில் "தேசியகீதம்" இசைக்கப்படாது பாரியதொரு மனக் கவலையினை இந்நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் இவ்வருடம் பெப்ரவரி மாதம் 4ம் திகதி நடைபெறவுள்ள 73வது சுதந்திர தின நிகழ்வில் தமிழிலும் "தேசியகீதம்" இசைக்கப்பட வேண்டும் என்பது அனைத்து இன மக்களதும் விருப்பமாகவுள்ளது.
நடைபெறப் போகும் இந்த 73 வது சுதந்திர தின நிகழ்வினை சகல மக்களும் கவலையற்ற மனதோடு சுதந்திரமாக, சுதந்திர தின நாளினை நினைவு கூற வேண்டும் என்பதே இன ஐக்கியத்தினை விரும்புகின்ற, நேசிக்கின்ற அனைவரதும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்நாட்டு மக்கள் சகலரதும் அபிலாசைகளும் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதனை இத்தருணத்தில் நாங்களும் வலியுறுத்துகின்றோம்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் 2வது பேராளர் மாநாட்டினை நடாத்துவதாக கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் உத்தேசத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்பனையும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும், கட்சியின் நலன் விரும்பிகளுக்கும், மக்களுக்கும் தெரியப்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன் என்றும் அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :