கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு.



எப்.முபாரக்-
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று (21) வரை 80 ஆக அதிகரித்தது.
மாஞ்சோலைச்சேனை கிராம சேவகர் பிரிவில் 66 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் மூவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அத்தோடு கடந்த வாரம் அனுப்பப்பட்ட இரத்த மாதிரிகளுக்கான PCR முடிவுகள் கிடைத்திருக்கின்றது.
இதில் முடக்கப்பட்ட மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவில் இருந்து ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என்று கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.

இதேவேளை, வியாழக்கிழமை (20) 58 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
நேற்று(21) தொற்றாளர்களின் முதல் நிலை தொடர்பாளர்கள் 15 நபர்களின் இரத்த மாதிரிகள் PCR பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் பெஹலியகொட மீன் சந்தையில் இருந்து ஆரம்பித்த, 2வது கொரோனா அலைக்குப் பின்னர் மொத்தமாக 80 நபர்கள் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :