அலி சப்ரி ரஹீம் எம்.பி யின் நானூறு குடும்பத்தினருக்கு நல் வாழ்வாதாரம் அளிக்கும் புதிய திட்டம்.


சில்மியா யூசுப்-

புத்தளம் பாராளுமன்ற உறுப்பினரான அலி சப்ரி ரஹீமின் திட்டமான Predema Apparel (Pvt) Ltd என்னும் கரம்ப கார்மெண்ட் ஜனவரி 01 ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்விகள் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த அவர்கள் கலந்து கொண்டார்.

இத்திட்டமானது புத்தளமாவட்டத்தில் தொழில் பயிற்சி பெறும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பெறக்கூடிய ஒரு திட்டமாக காணப்படுகிறது.
சுமார் 400 ற்கும் அதிகமான தையல் தொழிலாளர்களை பயிற்சியளிக்கும் முகமாக இத்திட்டம் புத்தளம் கரம்பை பிரதேசத்தில் இத் தையல் ஆலை நிறுவப்பட்டுள்ளது.

"கமசமக வெடபொல" எனும் வேலைதிட்டமானது ஜனாதிபதி ,பிரதமர் மற்றும் பஷில் ராஜபக்‌ஷ அவர்களின் ஆலோசனைக்கு அமைய இலங்கையில் வாழும் அனைத்து இளைஞர் யுவதிகளுக்கு ஒவ்வொரு கிராமங்களில் மினி கார்மண்ட் அமைப்பு திட்டத்தை சம்பந்தபடுத்தி அதில் முதல் கார்மன்ட் தையல் தொழிற்சாலையை நாம் புத்தள மாவட்டத்தில்
அமைத்திருக்கின்றோம் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில்,
இத்திட்டத்திற்கு அமைய பயிற்சியற்றவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு தொழில் வாய்ப்புக்கள் பெற்று கொடுக்கும் வேலைகளும் 400 பிள்ளைகளுடன் தொடர்ந்து 1000 பிள்ளைகளுக்கு இவ் வேலைத்திட்டத்தை வழங்க நாம் திட்டமிட்டு இருக்கிறோம்.

அதே போன்று கொவிட் தொற்றால் மரணிக்கும் ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய எமது தரப்பிலிருந்து
20க்கு வாக்களித்த உறுப்பினர்களும் இணைந்து அதற்குரிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இறுதியில் ஒரு சாதகமான முடிவிற்கு நாம் முயற்சி எடுத்திருக்கின்றோம்.

சிலர் அரசியல் செய்வதற்காக இனவாதம் பேசி இத்திட்டத்தினை தடையாக்கும் முறையாக பலர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். எனவே இவ்வாறு தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதனால் ஜனாஸா அடக்கம் செய்வதில் சில நேரம் இதில் கால தாமதம் ஆகலாம் என குறிப்பிட்டார்.

சிறுபான்மை மக்கள் தமது மூன்று தசாப்த கால தாகத்தை தணிக்கும் வண்ணம் அவர்களின் பிரதிநிதியாக என்னை தேர்ந்தெடுத்துள்ள நிலையில் தான் ஒருபோதும் அவர்களுக்கு துரோகம் இழைக்க மாட்டேன்.

அரசாங்கத்துடன் முட்டி மோதும் போக்கை தொடர்வதால் சிறுபான்மை சமூகத்துக்கு எதுவித நன்மையும் கிடைக்க போவதில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்
அத்தோடு "நானூறு குடும்பம் நலம் பெறும் ஆடைத் தொழிற்சாலை திட்டத்தின் பயன்கள் நிச்சயம் அங்கு பணி புரிவோரை தாண்டி அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் என்பது நிச்சயம்.
எதிர்காலத்திலும் இது போன்ற பல்வேறு திட்டங்கள் ஊடாக தனிப்பட்ட ரீதியிலும் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும்"
என பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :