தனிநபர் ஆதிக்கமும், தான் விரும்புகின்றவற்றை மட்டும் செய்கின்ற கட்சியில் இருந்துகொண்டு சமூகம்சார் பிரச்சினை முன்னெடுக்க முடியாது -பிரதேச சபை உறுப்பினர் பதுர்தீன்



அட்டாளைச்சேனை பைஷல் இஸ்மாயில் -
மூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தைரியமாக குரல்கொடுக்கும் வல்லமை தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமை ஏ.எல்.எம்.அதாஉல்லாவிடம் இல்லை என்பதாலும், தனிநபர் ஆதிக்கமும், தான் விரும்புகின்றவற்றை மட்டும் செய்கின்ற அக்கட்சியிலிருந்து விலகி, மக்களுக்காக உயிர் தியாகம் செய்யும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து செயற்படவுள்ளேன் என தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.பி.பதுர்தீன் தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸிலிருந்து விலகி, தனது ஆதரவாளர்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொள்ளும் நிகழ்வு (14) பாலமுனையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த பல தேர்தல்களில் தேசிய காங்கிரஸில் இணைந்து அதன் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளமை மட்டுமல்லாது எனது சொந்த பணத்தையும் கட்சியின் வளர்ச்சிக்காக செலவு செய்துள்ளேன். பாலமுனையில் எனது வட்டாரத்தை பெரும்பான்மை பலத்துடன வெற்றியடைச் செய்து பிரதேச சபைக்கும் தெரிவாகி கட்சியின் கௌரவத்தைக் காப்பாற்றியுள்ளேன்.

சமூகம் எதிர்நோக்கியுள்ள இக்கட்டான இக்காலகட்டத்தில் மறைந்திருந்து அரசியல் செய்வதற்கு ஒரு தலைமை தேவையில்லை. பல சவால்களுக்கு மத்தியில், தனது உயிரையும் துச்சமாக மதித்து மக்களுக்காக குரல் கொடுத்துவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீனைப் பலப்படுத்துவதே இன்றுள்ள தேவையாகும்.

எனது பிரதேசத்தில் கட்சிக்கு வாக்களித்த மக்கள் சார்ந்த ஏதாவது ஒரு பிரச்சினை தொடர்பில் தலைமையுடன் தொலைபேசியிலும் தொடர்புகொள்ள முடியாத ஒரு நிலைமை மேலும் தொடரக் கூடாதென்பதனைக் கருதியே அதற்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

அக்கட்சியில் ஒழுங்கு முறையான ஒரு நிருவாக கட்டமைப்பு காணப்படவில்லை. மக்கள் பிரதிநிதியான பிரதேச சபை உறுப்பினரான எனக்கே தலைவரைச் சந்திக்க முடியாது என்றால் எப்படி பொதுமகன், வாக்களித்தவர்களுக்கான சந்தர்ப்பம் கிடைக்கப் போகின்றது?

தேசிய காங்கிரஸுக்கு வாக்களித்த மக்களுக்கு, தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் தனிப்பட்ட செல்வாக்குள்ள ஒரு குழுவினரின் வழி நடத்தலில் செயற்பட்டுவருவது கண்டிக்கத்தக்க விடயமாகும்.

குறிப்பாக, ஜனாதிபதியின் ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பில் எனது வட்டாரத்தில் உள்ள எவருக்கும் தொழில் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இப்பிரதேசத்தில் பல அத்தியாவசிய உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டி இருந்தும் அது தொடர்பில் ஒரு முறையான திட்டம் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :