நாட்டின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி ஏற்படும் அபாயம்!-முஸம்மில் மொஹிதீன்



நாட்டின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி ஏற்படும் அபாயம் தோன்றி உள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வது மிகவும் ஒரு கவலையை தரும் விடயம்


எப்.முபாரக்-
நாட்டின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி ஏற்படும் அபாயம் தோன்றி உள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வது மிகவும் ஒரு கவலையை தரும் விடயம் என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்தார்.
முள்ளிப்பொத்தானையில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் வைத்து இன்று(3) ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்:

சர்வதேச வங்கிகளில் இலங்கையின் வங்கிகளின் letter of credit LC என சொல்லப்படும் கடன் பத்திரங்களை அனுமதிக்க மறுத்து வருவது நம் நாட்டை ஒரு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு இட்டு செல்லும் என பொருளாதார ஆய்வாளர்கள் அறிக்கைகள் வெளியாகி உள்ள நிலையில் அரசாங்கம் இவைகளை மக்கள் மத்தியில் வெளிவருவதை முற்றாக மறைக்க முற்படுவது ஒரு தான்தோன்றித்தனமே!

அத்தோடு நாட்டை கோவிட் 19 இருந்து பாதுகாக்க முடியாத நிலைமையும் தோன்றி வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. உள்நாட்டு உற்பத்தி 50% குறைவடைந்துள்ளது. வெளிநாட்டு வங்கிகள் கடன் பத்திரம் அனுமதி வழங்க மறுத்து வருவதால் பொருள்கள் இறக்குமதியில் ஒரு பாரிய வீழ்ச்சி ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

அரசாங்கம் தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதிகள் வெறுமனே வர்த்தமானியில் மாத்திரமே பிரசுரிக்க படுகிறது ஆனால் நடைமுறையில் எந்த மாற்றமும் கிடையாது.

இவைகளை கருத்திற்கொண்டு எதிர்க்கட்சி தனது நடவடிக்கைகளை உயர்த்த வேண்டி இது சம்பந்தமாக நாட்டு மக்களுக்கு உண்மையை எடுத்து கூறவேண்டும் இவை உங்கள் கடமைகள்.
இந்த நிலை தொடரும் பட்சத்தில் நாடு ஒரு பாரிய பொருளாதார பின்னடைவை எதிர்கொள்ளும் அபாயம் எழுந்துள்ளது.

இதை மீண்டும் கட்டி எழுப்ப மூன்று சதாப்தத்திற்கு மேல் காலம் தேவைப்படும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :