கடலில் நீரோட்டத்தின் வேகம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு



பாறுக் ஷிஹான்-
ம்பாறை மாவட்டதில் அண்மைக்காலமாக கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்த்துள்ளதுடன் கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே ஜீவனோபாயத்தை ந்டார்த்திவரும் சூழ்நிலையில் வெறும் கையுடன் வீடு திரும்பும் நிலை ஏற்படுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான கடந்த சில வாரங்களாக கடலில் ஏற்பட்டுள்ள நீரோட்டத்தின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலும்,நீரோட்டத்தினாலும் மீன்பிடி குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்து செல்லப்படுவதனாலும் , தோணிகளை கரையயேற்றுவதற்கு சிரமப்படுவதாக குறிப்பிடுகின்றனர். மீன்பிடியை நம்பி வாழ்வை நடார்திவரும் மீனவ்ர்கள் மீன்பிடி குறைந்த்துள்ள காரணத்தால் மூலதனத்தை செலவுசெய்து கடலுக்கு சென்று வெறுங்கையோடு வீடு செல்ல நேரிடுகினறது.
இது குறித்து மீனவர்கள் க்ருத்து தெரிவிக்கையில்

கொரோனா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம்.நீரோட்டத்தின் வேகம் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்து செல்லப்படுகிறது . இதனால் கரையோர மீன்பிடி முற்றாக பாதிக்கப்படுகின்றது. கடற்றோழில் மீன்பிடியை நம்பியுள்ள மீனவைகள் பல மூலதனங்களை செலவு செய்து நாள் முழுவதும் கடலில் தொழிலுக்கு சென்றுவெறுங்கையோடு திரும்புவதால் மீனவ குடும்பங்கள் ஏமாற்றத்துடன் வாழ்கையை நாடார்திவருவதாக மிகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆழ் கடல் மீன்பிடிக்கு செல்லும் மீனவர்கள் பத்தாயிரக்கணக்கான ரூபாய் பணத்தை செலவழித்து கடலுக்கு செல்கின்றனர் ஆழ் கடலில் நீரோட்டத்தில் அடிக்கடி போது ஏற்படும் சுழலினால் வலைகள் சுருட்டப்பட்டு மீண்டும் மீன்பிடிக்க முடியாத நிலைக்கு வலைகள் நாசமாகின்றன என எமக்கு தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :