குச்சவெளியில் கண மழை; வயல் நிலங்கள் குளங்கள் வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில்



ஏ.எல்.றபாய்தீன் பாபு-

குச்சவெளியில் கண மழை வயல் நிலங்கள் குளங்கள் வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் , கடந்த இரண்டு நாட்களாக கண மழை பெய்து வருகிறது இதனால் தாழ்நிலங்கள் வெள்ளத்தில்
மூழ்கியுள்ளன. 
வடலிக்குளம் , பெரிய வில்லுக்குளம் .மகாஆளம் குளம், இலுப்பைக்குளம் , சமளங்கு ளம் ஆகிய குளங்கள் நிரம்பி வழி வதால் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. குசவனாற்றாறு மேல் போட்டு வெள்ளம் பாய்வதால் கள்ளம் பத்தை வீதி போ.வரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
அறுவடைக்கு இன்னும் ஓரிரு கிழமை உள்ள நிலையில் விவசாயிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்முறை விவசாயிகள் மூன்று கட்டங்களாக பாதிக்கப்பட்டுள்ளதாக குச்சவெளி வடக்கு விவசாய சம்மேளனத் தலைவர் எஸ்.யூசுப் தெரிவித்தார்.
வரட்சி , பீடைத்தாக்கம் தற்போது வெள்ளப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது, சுமார் 1500 ஏக்கர் வயல் அறுவடை நேரத்தில் வெள்ளத்தால் விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விவசாய காப்புறுதி செய்தவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் விவசாய சம்மேளனத்தினூடாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு கமநல உத்தியோகத்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :