இந்தியாவின் தமிழ் நாட்டில் 42 வருடங்களாக இலக்கியப் பணியாற்றி வரும் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த சிற்றிதழ்களுக்கான போட்டியில் கிழக்கில் இருந்து வெளிவரும் விருந்து சிற்றிதழ் சிறந்த சிற்றிதழுக்கான விருதினை பெற்றுள்ளது.
கிழக்கில் பாண்டிருப்பில் இருந்து இரு மாதங்களுக்கு ஒரு முறை முறை வெளிவருகின்றது கலை, இலக்கிய, சஞ்சிகையான விருந்து சிற்றிதழ். பல்துறைக் கலைஞர் அகரம் செ.துஜியந்தனை ஆசிரியராகவும், மூத்த கவிஞர் மு.சடாட்சரனை ஆலோசகராகவும் கொண்டு இச் சிற்றிதழ் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
விருந்து சிற்றிதழுக்கு அயல்நாடொன்றில் சிறந்த சிற்றிதழுக்கான விருதும், கொளரவமும் கிடைப்பது பெருமையளிப்பதாகவும், எதிர்வரும் தை 30 ஆம் திகதி தமிழ்நாடு தேனி மாவட்டத்தில் இவ்விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாகவும் விருந்து ஆசிரியர் அகரம் செ.துஜியந்தன் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment