தமிழ் அரசியல் வாதிகளுக்கு இளைஞர்களின் எதிர்காலத்தை அவர்களின் சொந்த அரசியலுக்காக தியாகம் செய்யக்கூடாது. கிழக்கு மாகாண ஆளுனர் அனுராத யகம்பத்



எப்.முபாரக்-
மிழ் அரசியல் வாதிகளுக்கு இளைஞர்களின் எதிர்காலத்தை அவர்களின் சொந்த அரசியலுக்காக தியாகம் செய்யக்கூடாது என கிழக்கு மாகாண ஆளுனர் அனுராத யகம்பத் தெரிவித்தார்.
நேற்றைய தினம்(11) வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட ஹர்தால் அனுஷ்டிப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று(12) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
கிழக்கு மாகாண இளைஞர்களுக்கு அரசியல் இலட்சியத்துடன் அழைப்பு விடுக்கின்றேன்.
தற்போதைய இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை வெற்றிகரமாக ஆக்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டியதோடு,மாகாணத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுடன் ஒன்றினைந்து பயணிக்க வேண்டும்.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் ஒரு நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பான குற்றச்சாட்டுடன் தொடங்கிய ஹர்த்தாலாக மாறியது,இருந்த போதிலும் கிழக்கு மாகாணம் அனைத்து செயற்பாடுகளும் வழமை போல் இடம்பெற்றன.
சிறிய நினைவுச் சின்ன செயற்பாடுகளுக்காக இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையினை பயன்படுத்த கூடாது.
இவ்வாரான சிறிய விடயங்களை தமிழ் அரசியல் வாதிகள் போராட்டங்களாக மாற்றிவிடுவார்கள்.இவ்விடயத்தில் அரசியல் தலைமைகள் சித்தித்து செயற்பட வேண்டும்.

நாட்டில் நிலவிய முப்பது ஆண்டுகால யுத்தத்தின் இருண்ட நிழல்கள் மங்கி ஒளிமயமாகி விட்டன.
இப்போது செய்ய வேண்டியது என்னவென்றால், இந்த தமிழ் இளைஞர்களின் பங்களிப்பை நாட்டின் முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல உதவ வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :