சிங்கள இனவாத அரசியல் கட்சிகளின் தலைவர்களே முஸ்லிம்களை பற்றி தப்பான வழியில் இனவாத ரீதியான உணர்ச்சிகளை தூண்டி அப்பாவி சிங்கள மக்களை ஆக்றோசப்படுத்தியவர்கள்



எப்.முபாரக்-
முஸ்லிம்களின் அதி வளர்ச்சி கண்டு சகிக்க முடியாத சீற்றம் கொண்ட சிங்கள இனவாத அரசியல் கட்சிகளின் தலைவர்களே முஸ்லிம்களை பற்றி தப்பான வழியில் இனவாத ரீதியான உணர்ச்சிகளை தூண்டி அப்பாவி சிங்கள மக்களை ஆக்றோசப்படுத்தியவர்கள். என்பதை நம் முஸ்லிம்கள் மறந்துவிட கூடாது என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்தார்.
கந்தளாயில் இன்று(18) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

கடந்த சுமார் மூன்று சகாப்தம் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் எமக்கு என்ற தனி அரசியல், கல்வி வளர்ச்சி, சனத்தொகை வளர்ச்சி, பொருளாதாரம் மற்றும் வளங்களின் ஆய்வுகளை வைத்தே சிங்கள இனவாத கட்சிகள் எம்மீது எரி குண்டுகள் வீச ஆரம்பித்தனர்.

அந்த நிகழ்ச்சி நிரல்களை தொகுப்பதில் பிரதானிகளில் ஒருவரான ஹெலோ உரிமைய கட்சியின் செயலாளராக இருந்த தற்போதைய மக்கள் சக்தியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் "சம்பிக்க ரணவக்க" ஒரு பிரதானி என்பதையும் நம் சமூகம் விளங்கி கொள்ள வேண்டும்.

அவர் 2011 முஸ்லிம்களின் வளர்ச்சியை தாங்க முடியாத நிலையில் அவர் சிங்கள மக்களுக்கு ஆற்றிய உரையின் விளக்கம் பின்வருமாறு.

கொழும்பு நகரில் 1981 இல் இருந்த முஸ்லிம் சனத்தொகை 19% அது 2011 40% மாக அதிகரித்து ஒவ்வொறு முப்பது வருடமும் இரண்டு மடங்காக முஸ்லிம்கள் சனத்தொகை அதிகரிக்கும் அபாயம் தோன்றி உள்ளது.

இலங்கை சனத்தொகை 1981 இல் ஐந்து இலட்சமாக இருந்தவர்கள் 2011 இரண்டு மில்லியனாக அதிகரித்துள்ளனர் இந்த நிலையில் கொழும்பில் எத்தனையோ பௌத்த விகாரைகளில் இருக்கும் பிக்குமாருக்கு ஒரு நேர உணவு வழங்க அங்கு சிங்கள மக்கள் இல்லை அணைத்து சிங்கள மக்களின் காணிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதை உணர்ந்த என்னைப்போல் உணர்ச்சி மிக்க பௌத்த அரசியல் தலைவர்களுக்கே இது விளங்கும்.

அது மட்டுமா கடந்த கால 30 வருட யுத்ததில் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களே உண்மையான வெற்றியை பெற்றுள்ளனர், உதாரணமாக நான் திருகோணமலை மாவட்டத்தை உங்களுக்கு எடுத்து காட்டுகிறேன். அங்கு 1981 இல் தமிழ் மக்கள் 91 ஆயிரம் சிங்கள மக்கள் 89 ஆயிரம் முஸ்லிம் மக்கள் 75 ஆயிரம் இருந்தவர்கள் 2011 இல் முஸ்லிம்கள் 150,000 ஆக அதிகரித்துள்ளனர். ஆகவே நாம் பௌத்தர்கள் இது பற்றி மிகவும் சிந்தித்து செயல்பட வேண்டும் என அவரின் இனவாத தீவிர கருத்துக்களை நாட்டில் எல்லா சிங்கள பிரதேசங்களிலும் பரப்ப ஆரம்பித்ததன் பின் பல சிங்கள இனவாத கோட்பாடுகளுடன் உருவாகிய கட்சிகள் அனைத்தும் இப்படிப்பட்ட முஸ்லிம்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்தும் இனவாத செயற்பாடுகளின் காரணமாகவே முஸ்லிம்கள் நசுக்கப்பட்டு வருகின்றனர் என்பதை நாம் தெளிவாக விளங்க வேண்டும்.
நாம் முஸ்லிம்களின் சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பாக செயல்படும் ஒரு காலம் பற்றி சிந்திக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் உள்ளோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :