“மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிகின்றவர்களது அவல நிலையும் இலங்கை அரசின் கவனக்குறைபாடும் பற்றிய கண்ணோட்டம்”

லங்கைப்பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத்திகழும் உலக நாடுகளில் தொழில் புரியும் எமது சகோதர சகோதரிகள் ஒவ்வொரு வருடமும் ஆகக்குறைந்த அந்நியச்செலாவாணியாக எட்டு பில்லியன் ரூபாய்கள் ஈட்டிக்கொடுக்கின்றனர்

இவ்வாறு தொழில்புரியும் எமது நாட்டினர் கடந்த வருடத்திலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக தொடரும் கொரோனா பயங்கர தொற்று வியாதியால் பாதிக்கப்பட்டு அதிகமானவர்களது தொழில் நிலைகள் பாதிப்படைந்து காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி பலர் தொழில்களை இழந்தும் நிர்க்கதிக்குள்ளாகிய பரிதாபமான நிலைமை தொடர்கின்றது. இன்னும் பலர் நோய்வாய் பட்டும் இறந்துள்ளனர். மேலும் பலர் தனது தாயகத்திற்கு திரும்பிச்செல்ல முடியாமல் மாதக்கணக்கில் சிக்குண்டு சின்னாபின்னமாகியுள்ளனர்.

விசேடமாக மத்திய கிழக்கில் தொழில் புரியும் எமது தாயக உறவுகள் தினமும் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, உறங்க அறையின்றி கண்ணீரிலும் துன்பத்திலும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கடந்த வருடம் பங்குனி மாதத்திலிருந்து தனது தாயகத்திற்கு திரும்பி செல்வதற்காக தங்களது தொழில் புரியும் நாடுகளில் உள்ள தூதுவராயலங்கள் மூலம் பதிவு செய்து இன்று வரை இலவு காத்த கிளி போல் காத்து வீட்டில் ஏமாற்றத்துடன் வாழ்கின்ற துர்ப்பாக்கிய நிலைமையை தினமும் கண்கூடாக பார்க்கிறோம்.

மத்திய கிழக்கில் வேலைபுரியும் எமது நாட்டினர் தமது பிரயாணத்திற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து (இரண்டு வருடங்கள்) காப்புறுதி பெற்றும் தங்களது பயணத்தினை தொடர்கின்றனர். அவ்வாறு செல்லும் இவர்களது தொழில்கள் இழக்கும் பட்சத்தில் இப்பணியகம் எவ்வித உத்தரவாதமும் கிட்டவில்லை என்றும் அழாக்குறையாக புலம்புகின்றனர்.

கடந்த வருடம் ஏற்பட்ட இந்த கொடிய தொற்று நோயான கொரோனாவினால் பலர் நிர்கதிக்குள்ளாக்கப்பட்ட வேளையில் ஆசிய நாட்டவர்கள்(இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் ஆப்கானிஸ்தான்) தங்களது நாட்டு அரசாங்கங்களினால் விசேட விமான சேவைகள் வழங்கப்பட்டு மிகவும் கௌரவாமான முறையில் மீட்டெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இன்றும் அவர்களது சேவைகள் தொடர்ந்து செல்கின்றது. தினமும் நான்கு விமான சேவைகள் வழங்கப்பட்டு தங்களது நாட்டு வேலையாட்களை மிகவும் குறைந்த விலையில் விமான சீட்டு வழங்குவதுடன் இலவச மருத்துவ வசதி, தங்குமிடம் அனைத்து அரச செலவில் வழங்கப்பட்டும் பராமரிக்கப்பட்டு விசேடமாக கவனிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்தியா தினமும் பல விமான சேவைகள் தமது மக்களுக்கு வழங்கி ஆக குறைந்த விலையில் விமானசீட்டுக்களையும் வழங்குகிறது. அதுமட்டுமன்றி விமான நிலையத்திற்கு தங்களது வீடுகளுக்கு அழைத்துச்சென்று தனிமைப்படுத்தல் விதிகளையும் வழங்குகின்றது.இது ஒரு முன்மாதிரியான சேவையாக காணமுடிகிறது.

நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளும் தங்களது நாட்டு குடிமக்களை சிறப்பு விமானம் மூலம் அழைத்துச்செல்கின்றது. இவர்களுக்கான விமான வசதிகளையும் ஏனைய மருத்துவ வசதிகளையும் இலவசமாக வழங்கி வருகின்றது

பிலிப்பைன்ஸ் நாட்டு அரசாங்கம் தங்களது நாட்டு வேலையாட்களுக்கு சுமார் பத்தாயிரம் பெஸோஸ் பணம் இலவசமாக வழங்குவதுடன் இலவச பயணசீட்டு, இலவச தனிமைப்ப
டுத்தல், இலவச வைத்தியவசதி மற்றும் இலவச உணவு வசதிகளை வழங்கி தங்களது மக்களை மிகவும் இராஜ மரியாதையுடன் அழைத்து செல்கின்றமை எல்லோரையும் வியக்க வைக்கும் ஒரு அம்சமாக உள்ளது.

இலங்கை அரசு மாத்திரம் தனது வேலையாட்களை அழைத்து செல்வதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.மாறாக தூதுவராயத்தில் பதிவு செய்தவர்கள் பத்து மாதங்களாக இலவு காத்த கிளிகளாகவே காணப்படுகின்றனர். இதில் குறிப்பிட்ட சிலர் இலங்கை ரூபா படி மூன்று இலட்ச்சம் தொடக்கம் நான்கு இலட்ச்சம் வரை செலவு செய்து மிகவும் கஷ்டத்தின் மத்தியில் செல்கின்றமையினை தினமும் காணமுடிகிறது. ஏனைய ஆசிய நாட்டினருக்கு அந்தந்த நாடு வழங்கிய அந்தஸ்தும் அங்கீகாரமும் ஏன் இலங்கை அரசு தனது மக்களுக்கு அடியோடு நிராகரித்துள்ளது என்பது கேள்விக்குறி. அது மட்டுமன்றி இவர்களை இலங்கையிலுள்ள அரசாங்க தரப்பினர் மனித வெடிகுண்டு என்று விழித்துள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமாக கணிப்பிட முடிகிறது.

இலங்கை அரசு இந்த கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களது விடயத்தில் பாராமுகமாக இருந்து வருகின்றமை எல்லன்றோரையும் வெகுவாக பாதித்துள்ளமை மட்டுமன்றி எல்லோரையும் வெறுப்புக்குற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தனது நாட்டிற்காக பலகோடி பணத்தினை அந்நியச்செலாவணியாக உழைத்தவர்களுக்கு ஈற்றில் இந்த கேவலமான பிரதியுபகாரம் அவர்களது மனதை புண்ணாக்கியுள்ளது அதுமட்டுமன்றி விசனத்திற்கும் உட்படுத்தியுள்ளது.

ஏனைய ஆசிய நாடுகள் தங்களது மக்களுக்கு வழங்கிய வசதிகளை ஏன் இலங்கை தனது மக்களுக்கு வழங்க முன்வரவில்லை? என்பதை ஒப்பிட்டுப்பார்க்கும் போது இலங்கை அரசாங்கம் தனது மக்கள் மீது அன்பு காட்டவில்லை, அவசரம் காட்டவில்லை, அவர்களை அரவணைக்கவில்லை என்று பாரிய குற்றச்சாட்டுகள் இம்மக்கள் மத்தியில் கொந்தளித்துக்கு முறுகின்றது.

 எனவே எமது இலங்கை அரசு இவ் வருடமாவது சிறந்த முற்போக்கு திட்டத்தை வகுத்து ஏனைய ஆசிய நாட்டு மக்களுக்கு நிகராக தனது நாட்டு மக்களை ஆகக்குறைந்த செலவில் தனது தாயகத்திற்கு அழைத்துச்செல்ல முன்னெடுக்க வேண்டும் என்பதே அநேகமானவர்களது அங்கலாய்ப்பும் எதிர்பார்ப்புமாகும் என்பது இதன் கருப்பொருளாகும். இலங்கை அரசு இனியாவது கண் விழித்து தனது நாட்டு மக்களை மீட்டெடுக்கும் என்பதை அனைவரும் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :