கர்நாடகா உள்ளுராட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி மூன்று மடங்கு வெற்றி

ஸ்டிபிஐ கட்சி தொடங்கப்பட்ட காலம் முதலே கர்நாடகாவில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. 2010ல் முதன்முறையாக போட்டியிட்டு 39 இடங்களிலும், அதனைத் தொடர்ந்து 2015ல் 70 இடங்களிலும் வெற்றிபெற்றது. பஞ்சாயத்து, டவுன் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்ற நிலையில், பெங்களூர் மாநாகராட்சி தேர்தலில் போட்டியிட்ட எஸ்டிபிஐ வேட்பாளர் முஜாஹித் பாஷா மாநாகராட்சி சுகாதார ஆய்வாளராக நியமிக்கப்பட்டார்.

2013 சட்டமன்றத் தொகுதியில் மைசூர் நரசிம்மராஜா தொகுதியில் போட்டியிட்ட எஸ்டிபிஐ வேட்பாளர் அப்துல் மஜீது, பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளை பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடம் பெற்றார். 2020 இல் கர்நாடகாவில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில், 225 இடங்களில் எஸ்டிபிஐ கட்சி வெற்றி பெற்றுள்ளது.

கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க.வின் அடக்குமுறையும், கட்சிக்கு எதிரான பொய்ப்பிரச்சாரங்களையும் மீறி எஸ்டிபிஐ கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று, மக்களின் நம்பிக்கையை அதிகம் பெற்றுள்ளது என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அக்கட்சியின் கர்நாடக மாநில தலைவர் அப்துல் ஹன்னான் தெரிவித்திருப்பதாவது,
கடந்த தேர்தல்களை விட மூன்று மடங்கு வெற்றியை 2020 இல் பெற்றுள்ளோம். இந்த தேர்தலில் 3 கிராம பஞ்சாயத்துகளில் அதிகமான இடங்களை பெற்று தலைவர் பதவிகளை கைப்பற்றியுள்ளது. அதை போன்று, 10 கிராம பஞ்சாயத்துகளில் எஸ்டிபிஐ கட்சி தீர்மானிக்கும் நபர் தான் அதிகாரத்தில் அமர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரு சில வாக்குகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. வெற்றி பெற்ற எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர்களில் 20% தலித் மற்றும் பிற பின்தங்கிய சமூகத்தை சேர்ந்தவர்களாவர். மேலும், 50% பெண்களாவர். 

முஸ்லிம் சமூகத்தை தாண்டி அனைத்து சமூக மக்களும் எஸ்டிபிஐ கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர் என்பதை இது உணர்த்துகிறது. இந்த வெற்றி கர்நாடகாவில் எஸ்டிபிஐ கட்சியின் வளர்ச்சியும், எஸ்டிபிஐ கட்சியின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதையும் காட்டுகிறது. எங்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அனைவருக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :