நாகை மாவட்டம் கோயிலுக்குள் கூட்டு பாலியல் வன்கொடுமை! நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் கடும் கண்டனம் !!


பி.எஸ்.ஐ.கனி-

நாகைமாவட்டம் வெளி பாளையத்தில் கட்டிட வேலை பார்க்கும் பெண் தொழிளாலியை இரண்டு நபர்கள் சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் கோவிலுக்குள் கடத்தி சென்று அவரிடமுள்ள பணங்களை பறித்துக் கொண்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். இந்த கொடூர செயலுக்கு தேசிய பெண்கள் அமைப்பான நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் மாநில தலைவி ஃபாத்திமா ஆலிமா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

காஷ்மீர் கத்துவா பகுதியில் எட்டு வயது சிறுமி கோயில் கருவறையில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே.உலுக்கியது. காஷ்மீரரை தொடர்ந்து உத்திர பிரதேசம் தற்போது தமிழ்நாட்டிலும் இத்தகைய கொடூர சம்பவம் மீண்டும் அங்கேறியிருக்கின்றது. கோயில் என்றும் பாராமல் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவங்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தமிழகத்தில் நாகைமாவட்டம் வெளி பாளையத்தில் கட்டிட வேலை பார்க்கும் பெண் தொழிளாலியை இரண்டு நபர்கள் நள்ளிரவு கோவிலுக்குள் கடத்தி சென்று அவரிடமுள்ள பணங்களை பறித்துக் கொண்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர்.

அதேபோல் உ.பி யில் கோவிலுக்கு வழிபாடு செய்ய சென்ற 50 வயதுடைய பெண்ணை அர்ச்சகர் மற்றும் அவரது இரண்டு சீடர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உடலின் பல இடங்களில் எலும்புகளை உடைத்து, உறுப்பை சிதைத்து மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்.

தொடர்ந்து குழந்தைகள் பெண்கள் மீது தொடுக்கப்படும் இத்தகைய பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மேலும் கஷ்மீர், உ பி ஹத்ராஸ், பாதன் பகுதிகளில் வன் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் எலும்புகள் உடைக்க பட்டு உறுப்புகள் சிதைக்கப்பட்டதை பார்க்கும் போது பெண் சமூகத்தின் மீது திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

அதிலும் பாஜக ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணிகள் நடத்தக்கூடிய கொடுமைகளும் . வன்கொடுமைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படாததும் குற்றங்கள் அதிகரிக்க காரணமாகவே அமையும்.

எனவே இத்தகைய கொடூர குற்றங்கள் குறைய வேண்டுமானால் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதே போல் நாகையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாதுகாப்பும் உரிய நீதியும் நிவாரணமும் உடனடியாக வழங்க வேண்டும்.என்று தமிழக அரசை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.
என தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :