சாகாமத்தை நோக்கிப் படையெடுக்கும் சுற்றுலாமக்கள்!



வி.ரி.சகாதேவராஜா-
கொவிட் தொற்றையும் பொருட்படுத்தாமல் சாகாமக்குளக்கட்டின் நீர்வீழ்ச்சியைக்காண சுற்றூ மக்கள் தினமும் படையெடுத்துவருகின்றனர்.

கொவிட் காரணமாக அடைபட்டுக்கிடந்த மக்கள் அங்கு சென்று நீராடி உல்லாசமாக கழித்துவருவதை காணக்கூடியதாயுள்ளது. சுற்றுலா மையமோ என நினைக்கின்ற அளவிற்கு மக்கள் சாரிசாரியாக சென்று ஆடிபப்பாடி நீராடி உண்டு கழித்துவருகின்றனர்.

அக்கரைபற்றையடுத்து திருக்கோவில் பிரதேசசெயலாளர் பிரிவுக்குள் இச்சாகாமக்குளம் அமைந்துள்ளது.இக்குளம் அப்பிரதேச காணிகளுக்கு நீர் வழங்கிவருகிறது.பெரும் நீர்ப்பாசனக்குளமாக சாகாமக்குளம் விளங்கிவருவது தெரிந்ததே.

மாரி காலத்தில் மேல்பகுதியில் கூடுதாக மழை பொழிகின்றவேளையில் குளம் நிரம்பி வழிவது வழமை.இம்முறை வழமைக்கு மாறாக மலையகத்து நீர்வீழ்ச்சி போன்று நீர் சீறிப்பாய்ந்து கொட்டுவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இத்தகைய நீர்வீழ்ச்சி காட்சி ஒருசில நாட்களுக்கே நீடிக்கும் என பிரதேசசெயாளர் த.கஜேந்திரன் கூறுகிறார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :