கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என அறியப்படும் சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் எழுதிய "துளி அல்லது துகள் " இலக்கிய நூல் அறிமுக விழா எதிர்வரும் சனிக்கிழமை (30) காலை மருதமுனை கலாச்சார மண்டபத்தில் நடைபெற உள்ளது.
அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் இலக்கியவாதியுமான அம்ரிதா ஏயேமின் தலைமையில் நடைபெற உள்ள இந்நூல் அறிமுக விழாவில் தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளதுடன் சிறப்பு பேச்சாளராக முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்த உள்ளார். இந்நிகழ்வில் மேலும் நூல் வெளிட்டாளர்களான பேஜஸ் புத்தக இல்ல முதல்வரும் ஆய்வாளருமான இலக்கியவாதி சிராஜ் மஸூர் பதிப்புரை நிகழ்த்த உள்ளத்துடன் பிரபல இலக்கியவாதிகளான உமா வரதராஜன் மற்றும் கவிஞர் மன்சூர் ஏ காதிர் ஆகியோர் நூல் ஆய்வுரையையும் நிகழ்த்த உள்ளனர்.
பூமிக்கடியில் வானம், பறவை போல சிறகடிக்கும் கடல், எல்லாப் பூக்களும் உதிர்ந்து விடும், மழையை மொழிதல் என நான்கு கவிதை தொகுப்புக்களையும், விலைப்பட்டியல் கொலைப்பட்டியல் மு.கா தேசிய பட்டியல் மற்றும் 07வது ஜனாதிபதி தேர்தலும், முஸ்லிம் அரசியலும் எனும் இரு அரசியல் சார்ந்த நூல்களையும் எழுதியுள்ள சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் கல்முனை மாநகர சபையின் உறுப்பினராக இருந்து தனது கட்சி சார்பில் போட்டியிட்ட மற்றும் ஒருவருக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்தில் தன்னுடைய பதவியை துறந்த ஒருவராவார்.
பல சிறப்பு விருதுகளை பெற்றுள்ள இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு தன்னுடைய கவிதை தொகுதி ஒன்றுக்காக கிழக்கு மாகாண சபை விருதை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment