நீதித் துறையின் செயற்பாடுகளை ஆணைக்குழு ஊடாக நிறைவேற்றுத் துறை பெற்றிருக்கிறது.-எரான் விக்ரம ரத்ன



ன்று (31) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியல் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரம ரத்ன மேற்படி கருத்துத் தெரிவித்தர்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் வெளிவந்து அது தொடர்பான ஒர் அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது. அரசியல் பழிவாங்கள் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படுவதன் பிரதான நோக்கம் அதிலுள்ள உன்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்காகவாகும்.Truth Seeking Mechanism என்பது அதில் ஒர் வகையாகும்.பாதிக்கப்பட்வர்களால் முன்வைக்கப்படும் காரணங்களை நீதியரசர், தர்க்க ரீதியாக கேள்விக்குட்படுத்தி உன்மைகளை கண்டறியும் முறையாகும் .ஆனால் இவ்வாறு உன்மைகள் கண்டறியப்பட வில்லை.இவ்வாறான பின்னனியில் ரணில் விக்ரமசிங்க, சரத் பொன்சேகா,அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பலரையும்,அரச அதிகாரிகளான ஷானி அபோயசேகர,முன்னால் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி பனிப்பார் துஷித முதலிகே ஆகியோரையும் குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இச் செயற்பாடு மூலம் நீதித் துறையின் செயற்பாடுகளை ஆணைக்குழு ஊடாக நிறைவேற்றுத் துறை பெற்றிருக்கிறது.இது எமது நாட்டுக்கும் ஜனாநாயகத்திற்கும் பாரிய அச்சுறுத்தலான செயற்பாடாகும். ஆட்சிக்கு வந்து 15 மாதங்களில் ஜனநாயக ஏற்பாடுகளுக்கு பாரிய சவாலை பல பக்கங்களாலும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதும் அல்லது புதிதாக குற்றவாளிகளை அடையாளப்படுத்துவம் ஆணைக்குழுக்களின் செயற்பாடல்ல,மாறாக உன்மைகளை கண்டறிந்து அவற்றை நீதிமன்றம் மூலம் தீர்வுகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை செய்விப்பதாகும். ஏலவே குறிப்பிட்ட முன்னால் அமைச்சரகள் அரசியலமைப்பு ரீதியான ஒர் குற்றமிழைத்தவர் பேன்று தான் ஆணைக்குழு கூறுகிறது.நாட்டில் அரசியலமைப்பு நீதிமன்றம் ஒன்று இல்லாமையினால் மீண்டும் ஒர் ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து அவர்களுக்கு தன்டனை வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

 இதை நாங்கள் முற்றாக மறுக்கிறோம்.இத்தகைய கொள்கை ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட வேண்டும்.அரசியலமைப்பு நீதி மன்றம் நாட்டில் இல்லை என்றால் அதற்கு தான் உயர் நீதிமன்றம் உள்ளது.உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும்.அதை விடுத்த நீதிக் கட்டமைப்புக்கு வெளியேயுள்ளவர்களை நியமித்து நிறைவேற்றுத் துறையான ஜனாதிபதி இதில் தலையிட முடியாது.நாட்டில் இன்று பாரிய நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளது.சுயாதீன சுதந்திர நிறுவனங்கள் இரானுவ மயப்படுத்தப்பட்டு வருகிறது.

கொழும்புத் துறைமுக கிழக்கு முனையம் தொடர்பாக பிரதமர் மஹிந்த ரஜபக்‌ஷவின் தனிப்பட்ட நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்த வேண்டும் என்று ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தெரிவித்தார். கிழக்கு முனையம் தெடர்பான ஒப்பந்தத்தைக் கூட காட்டாமல் இருக்கின்றனர். தேசப்பற்று அரசாங்கம் அரச வளங்களை விற்க மாட்டோம் என்றவர்கள் இன்று; மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.நேற்று அஜித் நிவார்ட் கப்ரால் ஒன்றைக் கூறுகிறார், பல அமைச்சர்கள் துறைமுக அதிகார சபைக்குச் சென்று பிரிதொன்றைக் கூறுகின்றனர், நேற்று இரவு துறைமுக சேவை அத்தியவசிய சேவை என்று கூறி ஜனாதிபதி வர்த்தமானியை வெளியிட்டார், மறுபக்கம் துறைமுக சேவைக்கு புதிதாக துரிதமாக இரகசியமான முறையில் 220 பேரளவில் ஆட்சேரப்பும் இடம் பெறுவதாக தொழிற்சங்க தலைவர் ஒருவர் கூறுகிறார். இவற்றை நோக்கும் போது இதில் ஏதோ சிக்கல் இருப்பது யாவருக்கும் புலப்படுவதாக சுட்டிக் காட்டினார்.

அதேபோல் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சிணையின் உன்மைகளை வெளிப்படுத்தும் போது நாடு என்ற அடிப்படையில் பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்கு எதிர்க் கட்சியாகவும் ஐக்கிய மக்கள் சக்தியாகவும் நாம் பூரண ஒத்துழைப்பை வரங்குவோம் என்றும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :