மட்டக்களப்பு வர்த்தக சங்கம் காத்தான்குடி சம்மேளனத்திடம் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு.



ட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி மக்களுக்கு வழங்கவென ஒரு தொகை உலர் உணவுப் பொருட்களை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திடம் இன்று (13.01.2021) கையளித்தனர்.
மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் Dheshabanthu Selvarajah Muthukumar காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன உப தலைவரும் மட்டக்களப்பு வர்த்தக சங்க உபதலைவருமான KM Mohamed Khaleel JP (Bilaal Hajiyar) இடம் இதனை கையளித்தார்.
இந்த நிகழ்வு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கையளிப்பு நிகழ்வில் மட்டக்களப்பு வர்த்தக சங்க உயர்பீட முக்கிய இரு சமூகங்களையும் பிரதிநிதிப்படுத்தும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
இப்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு வர்த்தக சங்க உப தலைவர் KMM கலீல் ஹாஜியார் இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமையை மேம்படுத்த இது ஒரு சிறந்த நடவடிக்கை எனவும், சமூக ஒற்றுமையை நாம் கட்டிவளர்க்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
காத்தான்குடி மக்கள் சார்பாக மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம் எனவும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :