கல்முனையில் கரைவலை தோணிகளுக்கு அதிகளவான மீன்கள் பிடிபட்டன!



எம்.என்.எம்.அப்றாஸ்-
ல்முனை கடற்பரப்பில் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதியில் கரைவலை தோணிகளுக்கு அதிகளவான சூறை இன மீன்கள் இன்றைய தினம் (22) பிடிக்கப்பட்டன.குறிப்பாக சூரை வகை மீனினங்கள் அதிகளவில் பிடிக்கப்பட்டது.
இவ் வகை மீன்க்ள் சந்தையில் ஒரு கிலோ 300 ரூவாவிற்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அண்மையில் சீரற்ற காலநிலை காரணமாக இப் பகுதியில் கரைவலை மீன்பிடியானது மிகவும் குறைந்த நிலையில் காணப்பட்ட நிலையில் கரைவலை மீனவர்களுக்கு இவ் வகை மீன்கள் அதிகளவில் பிடிக்கப்பட்டது இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி நிலையில் காணப்பட்டனர்.
குறிப்பாக இவ் சூறை இன மீன்கள் ஆழ்கடல் படகுகளுக்கே அதிகமாக பிடிபடும் ஆனால் இன்றைய தினம் கரைவலை தோணிகளுக்கு அதிகமாக பிடிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தகத்து.
மேலதிக மீன்கள் வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பிவைக்கப் படுகின்ற இதேவேளை இப் பிரதேசத்தில் இவ் மீன்கள் கருவாட்டுக்காய் பதனிடப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :