இலங்கையர்களை வெளிநாட்டில் அடக்கம் செய்வதென்பது அடிப்படை உரிமை மீறல்.



சில்மியா யூசுப்-
ந்த நாட்டு அரசுக்கு வரி செலுத்தி இங்கு இவ்வளவு காலம் இலங்கையர்களாக வாழ்ந்தவர்களை வெளி நாடொன்றில் அடக்கம் செய்வது என்பது அவர்களின் இன்னொரு அடிப்படை உரிமை மீறல் ஆகும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கடந்த 07ம் திகதி நடை பெற்ற பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாட்டிய அவர், முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பாக நாளுக்கு நாள் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கிறது.
ஜனாஸாவை அடக்கம் செய்ய வரண்ட நிலம் ஒன்றை தேடுமாறு ஜனாதிபதி கூறியதாக கூறி இடமும் அடையாளம் காணப்பட்டதாக கடந்தமாதம் செய்தி வெளியிட்டனர்.
ஒரு மாதத்துக்கு முன் அடையாளம் காணப்பட்ட இடத்தை மீண்டும் தேடுமாறு பிரதமர் கூறியதாக சில வாரங்களுக்கு முன்னர் கூறப்பட்டது.
பின்னர் மாலைதீவில் அடக்கம் செய்ய தீவொன்றை ஒதுக்கியுள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டது.
ஜனாஸாக்களை எரிக்க பெட்டிகளுக்கு மக்களிடம் இருந்தே பணம் அறவிடும் அரசாங்கம் ஜனாஸாக்களை மாலைதீவுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யுமா?
இவ்வாறு மாறுபட்ட கருத்துக்கள் தெரிவித்து வந்த நிலையில் சுகாதார துறையே இறுதி தீர்மானம் மேற்கொள்ளும் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாகவே அரசாங்கம் தீர்மானிக்கும் என தெரிவித்து நிபுணர் குழுவொன்றை நியமித்தது.
அந்த குழுவும் தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்து அதில் அடக்கம் செய்யவும் முடியும் எரிக்கவும் முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
அந்தவகையில் இப்பொழுது அரசாங்கத்தில் உள்ள சில உறுப்பினர்கள் கூறுகின்றனர் இது தொடர்பாக அரசுதான் இறுதி முடிவெடுக்கும் சுகாதார துறையல்ல என கூறுகின்றனர். ஆகவே யார் சொன்னாலும் நாங்கள் எரிக்கும் நிலைப்பாட்டில் தான் இருப்போம் என்ற அரசின் நிலைப்பாடே இந்த மாறுபட்ட கருத்துக்களில் இருந்து தெளிவாகிறது.
ஆகவே சுகாதார துறை நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை இச்சபைக்கு அறிவிக்க வேண்டும்.
ஜனாஸாக்களை எரிப்பதுதான் இறுதி முடிவு என சுகாதார அமைச்சர் தெரிவித்த பின் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொடுத்த இருபதுக்கு ஆதரவு தெரிவித்த முஸ்லிம் உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன?
எங்களுக்கு அபிவிருத்திதான் வேண்டும். தொடர்ந்தும் அரசாங்கத்துடன்தான் இருப்போம் என்றால் உங்களின் நிலைப்பாட்டை மக்கள் முன் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :