புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவை சமர்ப்பித்தது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி



லங்கை ஜமாஅத்தே இஸ்லாமி இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை புதிய அரசியலமைப்பை வரைவதற்கான அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவுக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்தது.

புதிய அரசியலமைப்பை வரைவது தொடர்பில் நீதி அமைச்சு‌ பொது மக்களிடம் தமது முன்மொழிவுகள், கருத்துக்கள், எண்ணங்களை கோரியதற்கிணங்க இம்முன்மொழிவுகள் சமர்ப்பி க்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை தயாரிப்பதற்கு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம், மாவனல்லை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் தனித் தனி குழுக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது. அரசியலமைப்பு தொடர்பான விடய அறிவுள்ள புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள், சட்டத்தரணிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்களின் பங்கேற்புடன் குழுக் கலந்துரையாடல்கள் தொடர்ந்தேர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.

அந்த கலந்துரையாடல்களிலிருந்து மேற்படி மூன்று குழுக்களாலும் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மீண்டும் கலந்துரையாடப்பட்டு அவற்றில் முன்னுரிமையளிக்கப்பட வேண்டிய விடயங்களை உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

மொழி, மதம், அடிப்படை உரிமைகள், நாட்டிலுள்ள சிறுபான்மையினரது உரிமைகள், தேர்தல் முறைமை, அரச சேவைகள், பாராளுமன்ற பிரதிநிதித்துவம், சட்டத்துறை,
அதிகாரப் பரவலாக்கம், சுயாதீன ஆணைக்குழுக்கள், ஜனநாயக அமைப்பு, இரண்டாவது சபை அல்லது செனட் சபை, பல்லங்கத்துவ தேர்தல் தொகுதி, பாராளுமன்ற நியமன உறுப்பினர்கள்... என 14 தலைப்புகளில்
சுருக்கமாக அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி சமர்ப்பித்துள்ளது.

எதிர்காலத்தில் வாய்ப்பளிக்கப்படும் பட்சத்தில் புதிய அரசிலமைப்பினை வரைவதற்கான நிபுணர்கள் குழு முன்னிலையில் மேற்குறிப்பிட்ட முன்மொழிவுகளை நேரடியாக முன்வைக்கவும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தயாராகவுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில், புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை தயாரிப்பதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தனது நன்றியறிதல்களை தெரிவித்துக் கொள்கிறது.

சட்டத்தரணி பாரிஸ் ஸாலி LL.M (Staffordshire), LL.B (Colombo)
பொதுச் செயலாளர்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
31.12.2020
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :