கல்முனை பறக்கத்துள்ளாஹ்வின் தேடலில்;றியாஸ் குரானா!



தேடலின் சுவடு: 13

மூக வெளி பரந்து கிடக்கிறது. யாரும் எதையும் பரப்பி வியாபாரம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு வெளிப்படையாக பேசவோ, மானசீகமாக நடக்கவோ தெரிவதில்லை. 
எனது எண்ணத்தில் உருவான தகவல்களைத் திரட்டி ஆவணப்படுத்துதலில் நன்மையுள்ளது என்பதில நம்பிக்கை கொள்கின்றேன். தன்னில் படர்ந்திருக்கும் அழுக்குகளை விடவும் அடுத்தவர்களிடம் சுத்தம் தேடுபவர்கள் குறித்து நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை.
இந்த எழுத்துலக சமூக வெளியில் எட்டிக்கடந்து செல்பவர்களைத் தாண்டி, காத்திரமான ஒன்றாக பங்களிப்புச் செய்யும் என்பதில் முழுத் திருப்தி நிறைந்திருப்பது நல்ல செய்தியாகும்.
வாழ்க்கையில் வறுமை என்பது ஒரு மனிதனின் வாழ்வியலுக்கு எவ்வாறு தயார்படுத்துகின்றது என்பதையும், அதனூடாக அவனை எவ்வகையில் புடம் போடுகின்றது என்பதையும் எனது தேடலின் சுவடுகள் வெளிக் கொண்டுவருகின்றது.
மகிழ்ச்சிகரமற்ற சூழலினால் மிகச் சிறுவனாக இருந்த காலத்தில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர். இலக்கியத்தைக் கொன்று புதிய இலக்கியத்தை அறிமுகப்படுத்திய சிந்தனைவாதி றியாஸ் குரானாவின் பிறந்தநாள் இன்று.


றியாஸ் குரானா:

விவசாய ஜீவனோபாயத்தில் நடுத்தர வருமானத்துடன் வறுமையின் எல்லையில் வாழ்ந்த குடும்பத்தில் றியாஸ் குரானா 1974.01.14 அன்று பிறந்தார்.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த இஸ்மாயில் அபூபக்கர் மற்றும் ஆதம்லெப்பை பசீறா தம்பதிகளின் ஏக புதல்வன். இவரது பதிவுப் பெயர் அலால்டீன் என்பதாகும். அலால்டீன் என்றால் இலக்கிய உலகில் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. றியாஸ் குரானா என்பதே அலால்டீனின் இன்றய அடையாளம்.
தனது கல்வியை அக்கரைப்பற்று மத்திய கல்லூரியில் கற்றுள்ளார். Sales man ஆகக் கடந்த காலங்களில் தொழில் புரிந்து வருகின்றார்.
வறுமையின் எல்லையில் வாழ்ந்த இவரை இலகுவாக வறுமை சூழ்ந்துள்ளது. இவரது இளவயது மகிழ்ச்சிகரமாக அமையவில்லை. குடும்பச் சூழல் அதற்கான காரணமாக அமைந்துள்ளது.
ஏனைய மாணவர்களைப் போன்று உடுப்பு உடுத்தி பாடசாலைக்குச் செல்லும் வாய்ப்புக்களும், அதிக நண்பர்களும் அந்த சூழலில் இவருக்கு இருக்கவில்லை. தனது தனிமையைக் கடக்க வழியின்றி மிகச் சிறிய வயதில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார்.
இலக்கியம் பற்றியோ, கவிதைகள் பற்றியோ தெரியாததானால், தனக்குக் கிடைத்த துப்பறியும் நாவல்களை வாசித்தார். திரைப்படப் பாடல்களும், பாடநூலில் பதியப்பட்டிருந்த செய்யுள் மற்றும் கவிதைகள் என்பன அதிகபட்சம் இவருக்குத் தெரிந்த கவிதைக் குடும்பத்தைச் சார்ந்தவையாக இருந்தன.
இவரது வாசிப்பின் தொடர்ச்சியில் ஒரு தருணத்தில் கவிதைப் புத்தகங்களின் அறிமுகம் கிடைத்தன. ஜனரஞ்சக எழுத்துக்களான வானம்பாடி முகாம்களைச் சேர்ந்த கவிதைகள் இவருக்கு நெருக்கமாயின. தினகரன், வீரகேசரி பத்திரிகைகளும் றியாஸ் குரானாவின் கவிதைகளை அறிமுகம் செய்தன.
1994 களில் அந்தோணி மார்க்ஸ், தமிழவன் போன்றோரின் எழுத்துக்களில் கவரப்பட்டு, அந்தோணி மார்க்ஸை குருவாக எடுத்துக் கொண்டார். பின்னரான காலத்தில் கவிதைகளில் பின் நவீனத்துவங்களை அறிமுகப்படுத்தினார்.
அதன் விளைவாகத் தான் அதுவரையில் எழுதிய கவிதைகளை இவரே கொன்றுவிட்டு; கவிதை தொடர்பான புதிய வரைவிலக்கணத்தை உருவாக்கினார். இதில் பெருவெளி இலக்கியம் முக்கியமானது.
1990 களில் நண்பர்களுடன் சேர்ந்து “ஒன்றுமட்டும்” , “ஒன்றுமில்லை” எனும் சஞ்சிகைகளை வெளியீடு செய்து நவீன எழுத்தாளர்களை அறிமுகம் செய்ததாக அமைந்தது.
விபவி இலக்கிய வட்டத்தினால் இரண்டு கவிதைகள் பரிசில்களைப் பெற்றபோதும் அவை பின்நவீனத்துவமான கவிதைகளல்ல என மறுத்தார்.
எழுத்துக்களில் புதிய நோக்கை அதிகம் பின்பற்றும் இவரது எழுத்துக்கள் தனித்துவம் பெற்றுள்ளன. இவரது பல கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றுள் 13 கவிதைகள் தனித்தனியாக விரிவாக விமர்சனம் செய்யப்பட்டு இணையத் தளங்களில் காணப்படுகின்றன.
அரசியல், இலக்கியம் போன்ற விமர்சனங்கள் கவிதைகள் எனப் பலவற்றை எழுதிவரும் இவரது முதலாவது நூல் 2003இல் வெளியானது.
#ஆதி_நதியிலிருந்து_கிழக்குப்பக்கம்_பிரிகிறது_ஒரு_கிளை எனும் ஒரு சிறிய பிரசுரம் முஸ்லிம்களின் அரசியலைப் பற்றி எழுதிய நுண் காவியமாகும்.
02. #வண்ணத்துப்பூ_பூச்சியாகிப்_பறந்த கதைக்குரிய காலம் - முஸ்லிம்களின் அரசியலைப் பற்றி எழுதிய நுண் காவியம்
03. #நாவல்_ஒன்றின்_மூன்றாம்_பதிப்பு - பின்நவீனத்துவக் கவிதை,
04. #மிகுதியை_எங்கு_வாசிக்கலாம் - பின்நவீன கவிதை
05. #மாற்றுப்பிரதி - பின்நவீன கவிதை
ஆகியன இவரது நூல்களாகும்.
இலக்கியம் சார்ந்து சுமார் 18 தனிநபர் நேர்முகங்கள் செய்யப்பட்டவராக இவர் காணப்படுகின்றார்.
நவீன கவிதை காலாவதியாகிவிட்டது எனும் இவரது பெரிய கட்டுரை 20௧ள் வெளிவந்து பெரும் பேசுபொருளாகியது.
ஈழத்து நவீன கவிதை வரலாற்றை புதிய கோணத்தில் விமர்சித்து #நடு இணைய இதழில் தொடர்ச்சியாகப் பிரசுரமாகி வருகின்றது.
விருதுகளுக்கு விருப்பமில்லாத றியாஸ் குரானாவின் நேர்காணல்கள், கட்டுரைகள்,பத்திகள் என்பன தொகுப்பாக்கம் செய்ய ஆயத்தங்கள் இடம் பெற்று வருகின்றன.
ஒட்டுமொத்தத்தில் இவர் எதிர்காலத்தில் கடந்தகால கவிதைகள் குறித்து புதுமையை முன்வைத்தவராகப் பார்க்கப்படலாம். இவரது பணிக்கு வாழ்த்துக்கள்.
ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்
கல்முனை
2021.01.14
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :