வருடாந்த இடமாற்றத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால், கல்முனை மாநகர சபையின் பிரதம பொறியியலாளராக நியமிக்கப்பட்ட ஏ.ஜே.ஏ.ஹலீம் ஜௌஸி இன்று வெள்ளிக்கிழமை (22) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கல்முனை வலயக் கல்வி பணிமனைக்கான மாவட்டப் பொறியியலாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே, இவர் கல்முனை மாநகர சபைக்கு இடமாற்றப்பட்டிருக்கிறார்.
முதலாம் தர, பட்டயப் பொறியியலாளரான ஹலீம் ஜௌஸி, கல்முனை மாநகர சபையிலேயே முதல் நியமணத்தைப் பெற்று, அங்கு நீண்ட காலம் பணியாற்றியிருந்தார். அதன் பின்னர் கட்டிடங்கள் திணைக்களத்தின் வடிவமைப்பு பொறியியலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டயப் பொறியியல் துறையில் இளமானி பட்டத்தையும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் சூழலியல் பொறியியல் துறையில் முதுமானிப் பட்டத்தையும் பெற்றிருப்பதுடன் எந்திரவியல் தொழில்சார் துறையில் வேறு சில உயர் தகைமைகளையும் பெற்றுள்ளார்.
சிவில் சமூக செயற்பாடுகளில் கூடிய ஈடுபாடு காட்டி வருகின்ற பொறியியலாளர் ஹலீம் ஜௌஸி, கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பிரதித் தலைவராக பணியாற்றியுள்ளதுடன் வேறு சில பொது அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளையும் வகித்து வருகின்றார்.
கல்முனை அஸ்ஸுஹரா வித்தியாலயம் மற்றும் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி என்பவற்றின் பழைய மாணவரான இவர், எஸ்.எல்.அப்துல் ஜப்பார் மற்றும் ஏ.ஜி.சலீமா தம்பதியரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment