வரிப்பணம்; மக்களின் அபிவிருத்திக்கு வழங்கப்பட வேண்டும்.திருகோணமலை நகரசபை உறுப்பினர் எஸ்.சிவகுமார் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில்...



எப்.முபாரக்-
திருகோணமலை மொத்த மீன் சந்தை நகரசபைக்குக் கீழ் செயல்பட வேண்டும் அதன் வரிப்பணம் இந்த நகர மக்களின் அபிவிருத்திக்கு வழங்கப்பட வேண்டும் என கோரி திருகோணமலை நகரசபை உறுப்பினர் எஸ்.சிவகுமார் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

திருகோணமலை நகரசபைக்கு முன்னால் இன்று(29) காலை 7:15 மணி அளவில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர் இவ்வாறு ஊடகங்களுக்கு தமது அறிக்கை ஒன்றினையும் வெளிப்படுத்தியுள்ளார். அதில் திருகோணமலை நகரம் பல்லின சமூகம் சேர்ந்து வாழும் பகுதியாகும். பலதரப்பட்ட அபிவிருத்திகளின் தேவைப்பாடு அதிகமாகவே உள்ளது.
நகரசபையும் மக்களின் வரிப்பணத்தைக் கொண்டே அபிவிருத்திகளை செய்து வருகின்றது.
உள்ளூராட்சி சட்டப்படி ஒரு நகரில் இருக்கும் சந்தைகள் அந்தந்த நகரசபையின் கீழோ அல்லது பிரதேசசபையின் கீழோ செயல்பட வேண்டும்.
திருகோணமலை நகர மணிக்கூட்டு அருகே உள்ள அதிக வருமானம் பெறும் மொத்த மீன் சந்தை 2012ஆம் ஆண்டு தொடக்கம் கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்குக் கீழ் செயல்படுகின்றது.

2016ஆம் ஆண்டு வரை 40 வீதம் நகரசபைக்குச் செலுத்தப்பட்ட வரி அதன் பின் கிடைக்கவில்லை.மீன் சந்தையில் வியாபாரம் செய்பவர்கள் கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்கு வரிப்பணம் செலுத்துவதினால் நகரசபைக்கு அந்த வரிப் பணம் கிடைப்பதில்லை. அதனால் நகர அபிவிருத்தியை மந்தம் அடையச் செய்கின்றது.
இந்த நிலை மாறவேண்டும், நகர சபையின் கீழ் மொத்த மீன் சந்தை கொண்டுவரப்பட வேண்டும் அதன் வரிப்பணம் நகரசபைக்குச் செலுத்தப்பட வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :