திண்மக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றமும் டெங்கு நோய் பரவும் வாய்ப்புள்ளதாக மக்கள் புகார்.


றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்-

ல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது கிராமத்தின் மேற்குப் பக்கமாக அமைந்துள்ள பிரதேசம் தான்
வெலிவோரியன் வீட்டுத் திட்டமாகும். இது 2004ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக
நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டம்.

இவ்வீட்டுத் திட்டத்திட்ட பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு முன்பாகவும் அருகே உள்ள வயல் வெளி பாதைகளின் அருகாமையிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நீர் நிலைகளிலும் இனந்தெரியாத நபர்களால் இரவு நேரங்களில் திண்மக்கழிவுகளையும் குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டுவதனால் இந்தப் பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் டெங்கு நோய்களும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இக்கழிவுகளை மேய்ச்சலுக்கு வரும் ஆடு மற்றும் மாடுகள்
உட்கொள்வதால் அவைகளின் உடலில் பொலித்தீன் கழிவுகளும் உச்சேர்வதால்
இவைகள் இறப்பதற்குரிய காரணமாக இருக்குமென பிரதேச மக்கள் விசனம் தெரிவிப்பதுடன் இது ஒரு நாசகார ஈனச் செயல் எனவும் கருத்து தெரிவித்தனர்.

இந்தப் பாதையால் அதிகமான பொது மக்களும், விவசாயிகளும் பிரயாணம் செய்யும் ஒரு வயல் வெளிப்பதையுமாகும். இதனூடாகப் பயணித்தால் காரைதீவு கிராமம், மாவடிப்பள்ளி மற்றும் சம்மாந்துறை போன்ற கிராமங்களுக்கு சென்று வர முடியுமாகவும் இருக்கிறது.

இதன் அருகாமையில் நீர்நிலைகள், வாய்க்கால்கள் காணப்படுவதால் இக்குப்பைகளால் அவைகளும் பாதிப்படையும் நிலையில் காணப்படுகின்றன. கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் மற்றும் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இருவரும் இணைந்து இவ்விடங்களில் குப்பைகள் மற்றும் கழிவுகள் போடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. என்று விளம்பர பதாகை இட்டும் இக்கட்டளையை மீறி பொது மக்கள் செயற்படுவது கண்டிக்கத்தக்க மற்றும் தண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும் மாறியுள்ளது.

இதன் மூலம் துர்நாற்றம் வீசுவதுடன் பாதையால் பயணிக்க முடியாமல் போவதுடன் டெங்கு மற்றும் வாந்திபேதி போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆகவே உரிய அதிகாரிகள் குற்றம் செய்யும் நபர்களை கண்டறிந்து தண்டனை வழங்குவதுடன் குறிப்பிட்ட பிரதேசத்தை பார்வையிட்டு உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும் என பொது மக்கள் வேண்டி நிற்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :