இலங்கை சுதந்திர தின கொண்டாட்டங்களும் முஸ்லிம்களும்



கலாநிதி அரூஸ் ஷரிப்தீன். - நளீமி
ஆஸ்திரேலியா-

லங்கையின் சுதந்திர தினம் எம்மை முன்னோக்கி வந்து கொண்டிருக்கும் இந்தத்தருணத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு இந்த தினத்தை கையாள வேண்டும் என்று பல ஓடியோக்களையும் போஸ்ட்களையும் கேட்க பார்க்க முடிந்தது. இந்த இடத்தில் இது பற்றிய எனது பார்வையை எழுதலாம் என்று நினைக்கிறேன்.

சுதந்திர தினத்தை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும் என்று ஒரு சாராரும் இல்லை அதனை நாங்கள் கொண்டாட வேண்டும் என்று இன்னொரு சாராரும் வாதிடுகின்றனர்.

என்னை பொறுத்த வரை, அடிப்படையை தெளிவாக விளங்கிக் கொண்டால் எமது முஸ்லீம் சமூகம் மிகவும் வெற்றிகரமான முடிவுகளை பெறமுடியும்.
தற்போது இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் ஒரு போதும் இல்லாதவாறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் இதனால் நாங்கள் இலங்கையில் ஒரு தேசிய கொண்டாட்டமாக கருதப்படும் சுதந்திர தினத்தை புறக்கணிக்க வேண்டிய அவசியமே கிடையாது. இலங்கையில் தற்போது முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்குரிய காரணம் தற்போதைய அரசாங்கத்தின் சில கொள்கைகளே. எனவே நாங்கள் அந்த அரச கொள்கைகளுக்கு எதிர்ப்பை வெளிக்காட்டுகிறோம் என்று சுதந்திர தினத்தை புறக்கணிப்பதை ஒரு உசிதமான முடிவாக நான் பார்க்கவில்லை. தற்போதைய அரசாங்கத்தின் பிழையான சில கொள்கைகளுக்கு எதிராக நாங்கள் வேறு ஜனநாய வழிகளில் எதிர்ப்பை தெரிவிக்கலாமே தவிர தேசிய சுதந்திர தின கொண்டாடடங்களில் அவைகளை தொடர்பு படுத்துவது நல்லதல்ல.

சுதந்திர தின கொண்டாட்டங்கள் தற்போது ஆடசியில் இருக்கும் அரசாங்கத்தின் பிரத்தியோக கொண்டாடடமல்ல இது எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் பிரதி வருடமும் இலங்கையர்களால் அவ்வப்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் அனுசரணையுடன் செய்யப்படும் ஒரு நிகழ்வாகும். எனவே இலங்கையர் என்ற அடிப்படையில் நாங்கள் அதனை ஒரு முக்கியவத்துவமுள்ள நிகழ்வாக கருதுவதில் தவறில்லை என்பது எனது கருத்து.
இலங்கை முஸ்லிம்கள் இலங்கையர்கள். இலங்கைக்கு எவ்வளவோ பங்களிப்பு செய்திருக்கிறார்கள். எப்போதும் ஐக்கிய இலங்கைக்கு அதன் இறைமைக்கு பங்கம் ஏற்படும் எதனையும் செய்த வரலாறுகளே இல்லை. தற்போதைய அரசாங்கத்தின் சில கொள்கைகள் நாளை அவர்களா லேயே மாற்றப்படலாம் அல்லது இதன் பிறகு வரும் அரசாங்கங்கள் அதனை மாற்றலாம். எனவே நாங்கள் சுதந்திர தினத்தை புறக்கணித்து நாங்கள் இலங்கைக்கு சொந்தமில்லாதவர்கள் என்று ஒரு தவறான செய்தியை சொல்ல தேவையில்லை.
இலங்கையின் சுதந்திர தினம் எமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த தினம். எமது மூதாதையர்கள் இன மத மொழி வேறுபாடுகள் இல்லாமல் இலங்கையர்களாக ஒரே அணியில் நின்று போராடி பெற்ற சுதந்திரத்தை நாங்கள் கொண்டாடாமல் வேறு யார் கொண்டாட முடியும்.
எங்களுக்குரிய தற்போதைய நெருக்குவாரங்களுக்கும் இலங்கையின் சுதந்திர தினத்துக்குமிடையில் நாங்கள் எந்தவொரு தொடர்ப்பையும் ஏட்படுத்த தேவையில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :