செங்கலடி பிரதேச சபை த.தே.கூட்டமைப்பின் வசமானது.


ஏறாவூர் நிருபர்-

ட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் புதிய
தவிசாளராக சின்னத்துரை சர்வானந்தன் ஆறு மேலதிக வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டார்.

மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு திங்கட்கிழமை (18) கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ந.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

31 பிரதேச சபை உறுபினர்களைக் கொண்ட குறித்த பிரதேச சபையில் ஏற்கனவே தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ந.கதிரவேல் பதவிவகித்தார்

2021 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இரண்டு தடவைகள் சபையின் சமர்ப்பிக்கப்பட்டு தோற்;கடிக்கப்பட்டமையினால் உள்ளுராட்சி சபைகள் சட்டத்தின் பிரகாரம் தவிசாளர் பதவி இழக்கப்பட்டது.

புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்காக திறந்தவெளி வாக்கெடுப்பிற்கு விடுவதா அல்லது இரகசிய வாக்கெடுப்பிற்கு விடுவதா என்பது குறித்து கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரினால் உறுப்பினர்களிடம் கோரப்பட்டது இதற்கு திறந்தவெளி வாக்கெடுப்பிற்குவிடுமாறு கோரியிருந்தனர்.

வாக்கெடுப்பிற்கு போட்டியிர தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் சி.சர்வானந்தனை வ.சந்திரவர்மன் (த.தே.கூ) முன்மொழிய அதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பி.சபை உறுப்பினர் சி.சிவானந்தன் (த.தே.கூ) வழிமொழிந்தார். இதே வேளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிட ந.திருநாவுக்கரசுவை நா.மோகராஜ்(த.ம.வி.பு); முன்மொழிய அதை உறுபினர் க.லோகிதராஜா(த.ம.வி.பு)ழிமொழிந்தார்.

வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் போட்டியாளர்; சி.சர்வானந்தனுக்கு ஆதராவாக த.தே.கூ- 07 , ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி -06 , ஐ.தே.க -03, தமிழர் விடுதலைக் கூட்டணி -01 ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 17 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போட்டியாளர் ந.திருநாவுக்கரசுக்கு ஆதரவாக த.ம.வி.பு - 08, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - 01, ஐ.தே.க - 01, ஐக்கிய சமாதான கூட்டமைப்பு - 01 ஆகிய கட்சிகள் சார்பாக 11 உறுப்பினர்களின் வாக்குகளும் கிடைக்கப்பெற்றது. மற்றும் தமிழர்விடுதலைக் கூட்டணியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மற்றும் ஜனநாஜக தேசிய இயக்கம் கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஆகிய இருவரும் இதற்கு நடுநிலைவகித்தனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரொருவர் சபைக்கு சமூகமளிக்கவில்லை. 06 மேலதிக வாக்குகளால் சி.சிவானந்தன்(த.தே.கூ) தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்), தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கு.ஹிரிதரன் ஆகியோர் சபைக்குள்; பிரசன்னமாகியிருந்தனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :