அம்பாறை நாவிதன்வெளி பிரதேச செயலக பட்டதாரி பயிலுனர்கள் ஆசிரியர் பயிலுனர்களாக உத்தியோகபூர்வமாக நியமனம்


பாறுக் ஷிஹான்-

னாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடத்திற்கமைவாக நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை பாடசாலைகளில் பயிற்சி ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான நியமனக் கடிதங்கள் இன்று(20)நாவிதன்வெளி பிரதேச செயலக கலாசார மத்திய நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கமைய நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களில் 62 பட்டதாரி பயிலுனர்கள் சம்மாந்துறை வலயத்தின் கீழுள்ள நாவிதன்வெளி கோட்டப் பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை வலயக் பிரதிக் கல்விப் பணிப்பாளரும், நாவிதன்வெளி கோட்ட பதில் பணிப்பாளருமான என்.நிதர்சினி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எஸ்.எம்.ஹைதர் அலி, எஸ்.எம்.எம்.அமீர், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன் அதிபர்களான எஸ்.எம்.யூசுப் கே.பாலசிங்கன் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை வலயக்கல்வி பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யும் வண்ணம் இப் பட்டதாரி பயிலுனர்கள் ஆசிரியர் பயிலுனர்களாக இணைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :